வயநாடு தொகுதியை கைவிடுகிறார் ராகுல்: பிரியங்காவை களமிறக்க முடிவு
வயநாடு தொகுதியை கைவிடுகிறார் ராகுல்: பிரியங்காவை களமிறக்க முடிவு
UPDATED : ஜூன் 17, 2024 07:55 PM
ADDED : ஜூன் 17, 2024 07:37 PM

வயநாடு தொகுதி எம்.பி., பதவியை ராகுல் ராஜினாமா செய்ய முடிவு செய்துள்ளார். அங்கு பிரியங்காவை களமிறக்க காங்.,முடிவு செய்துதுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
நடந்த முடிந்த பார்லிமென்ட் லோக்சபா தேர்தலில் ராகுல், உபி. ரேபரேலியிலும், கேரளாவின் வயநாடு தொகுதியிலும் போட்டியிட்டு வெற்றி பெற்றார்.
இந்நிலையில் எந்த தொகுதியை கைவிடுவது என்ற குழப்பத்திற்கிடையே இன்று வெளியான தகவலில், கேரளாவில் வயநாடு லோக்சபா தொகுதியை கைவிடுவது எனவும், ரேபரேலி தொகுதி எம்.பி.யாக தொடரவும் வயநாடு எம்.பி.பதவியை ராஜினாமா செய்ய ராகுல் முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
பிரியங்கா நடந்து முடிந்த லோக்சபா தேர்தலில் ராகுலுடன் இணைந்து தீவிர பிரசரராம் செய்தார். தற்போது முதல்முறையாக வயநாடு தொகுதி எம்.பி.,பதவிக்கு போட்டியிடுகிறார்.
கார்கே கூறியதாவது: வயநாடு தொகுதியை நாங்கள் கைவிடவில்லை என்பதை தொகுதி மக்களுக்கு தெரிவிக்கவே பிரியங்கா அங்கு போட்டியிடுகிறார் என காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே தெரிவித்துள்ளார்.
ராகுல் கூறியதாவது: கடினமான நேரங்களில் எனக்கு துணை நின்றவர்கள் வயநாடு தொகுதி மக்கள். பிரியங்கா வெற்றி பெறும் போது இரண்டு எம்.பி.,க்கள் அங்கு இருப்பார்கள். வயநாடு,ரேபரேலி இரு தொகுதிகளும் எனக்கு இதய பூர்வமான தொடர்பு இருக்கிறது. வயநாடு தொகுதியில் நான் வாக்குறுதி அளித்ததை நிச்சயம் நிறைவேற்றுவேன் இவ்வாறு ராகுல் தெரிவித்துள்ளார்.