ADDED : ஜன 26, 2024 11:15 PM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
புதுடில்லி: காங்., எம்.பி. ராகுல் வரும் லோக்சபா தேர்தலில் மீண்டும் வயநாடு தொகுதியில் போட்டியிட உள்ளதாக காங்., வட்டாரங்கள் தெரிவித்தன.
இது குறித்து கேரள காங்., எம்.பி,. முரளீதரன் கூறியது, கடந்த 2019 லோக்சபா தேர்தலில் கேரளா மாநிலம் வயநாடு தொகுதியிலிருந்து போட்டியிட்டு வெற்றி பெற்றார் ராகுல். இம்முறையும் அவர் அதே தொகுதியில் போட்டியிட வலியுறுத்தியுள்ளோம். பாதயாத்திரையில் உள்ளதால் பரிசீலித்து வருகிறார். அவர் மீண்டும் போட்டியிடுவார் என எதிர்பார்க்கிறோம்.
நிதிஷ் விவகாரத்தால் இண்டியா கூட்டணியில் எந்த பிரச்னையும் இல்லை. இவ்வாறு முரளீதரன் கூறினார்.

