பார்லிமென்ட் விதிமுறையில் ராகுலுக்கு விரும்பமில்லை; ஜகதாம்பிகா பால் விமர்சனம்
பார்லிமென்ட் விதிமுறையில் ராகுலுக்கு விரும்பமில்லை; ஜகதாம்பிகா பால் விமர்சனம்
ADDED : மார் 27, 2025 07:56 AM

புதுடில்லி: ''பார்லிமென்ட் விதிமுறையில் ராகுலுக்கு விரும்பமில்லை. அவர் அவைக்கு வருவதில்லை'' என பா.ஜ., எம்.பி.யும், பார்லி., கூட்டுக்குழு தலைவருமான ஜகதாம்பிகா பால் தெரிவித்தார்.
பார்லிமென்ட் பட்ஜெட் கூட்டத்தொடரின் இரண்டாம் அமர்வு, மார்ச் 10ம் தேதி தொடங்கி ஏப்ரல் 4ம் தேதி வரை நடைபெறுகிறது. லோக்சபாவில் பேச அனுமதிக்கப்படவில்லை என்று லோக்சபா எதிர்க்கட்சித் தலைவரும், காங்கிரஸ் எம்.பி.,யுமான ராகுல் குற்றம் சாட்டினார்.
இது குறித்து, ஜகதாம்பிகா பால் கூறியதாவது: பார்லிமென்ட் விதிமுறையில் ராகுலுக்கு விரும்பமில்லை. அவர் தேசத்தை தவறாக வழி நடத்துகிறார். இந்த அவையில் யாரையும் பேசுவதை யாராலும் தடுக்க முடியாது. அவரே அவையில் உட்காருவதில்லை.
அவர் எந்த மசோதா மற்றும் முன்மொழிவையும் பேசுவதில்லை. காங்கிரஸ் எம்.பி.,க்கள் பார்லிமென்டில் விவாதத்தில் பங்கேற்று பேசுகிறார்கள். அவரால் (ராகுல்) ஏன் பேச முடியாது?. இவ்வாறு அவர் கூறினார்.