sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, நவம்பர் 07, 2025 ,ஐப்பசி 21, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

இந்தியா

/

ஆண் என தெரியாமல் பெண் என்று கூறினார் ஓட்டு திருட்டு புகாரில் மீண்டும் ராகுலுக்கு 'குட்டு'

/

ஆண் என தெரியாமல் பெண் என்று கூறினார் ஓட்டு திருட்டு புகாரில் மீண்டும் ராகுலுக்கு 'குட்டு'

ஆண் என தெரியாமல் பெண் என்று கூறினார் ஓட்டு திருட்டு புகாரில் மீண்டும் ராகுலுக்கு 'குட்டு'

ஆண் என தெரியாமல் பெண் என்று கூறினார் ஓட்டு திருட்டு புகாரில் மீண்டும் ராகுலுக்கு 'குட்டு'


ADDED : நவ 07, 2025 01:01 AM

Google News

ADDED : நவ 07, 2025 01:01 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

புதுடில்லி: ஹரியானா தேர்தல் தொடர்பாக பிரேசில் மாடலின் புகைப்படத்தை வெளியிட்டு முறைகேடு நடந்திருப்பதாக ராகுல் குற்றஞ்சாட்டிய நிலையில், தான் ஒரு மாடல் அல்ல; சிகை அலங்கார நிபுணர் என அந்த பெண் விளக்கம் அளித்துள்ளார்.

மேலும், ராகுல் குறிப்பிட்ட பெயர் ஆண் என்பதும், அவர் ஒரு போட்டோகிராபர் என்பதும் தெரியவந்துள்ளது.

டில்லியில் நேற்று முன்தினம் செய்தியாளர்களை சந்தித்த ராகுல், ஹரியானா சட்டசபை தேர்தல் குறித்து 'ஹெச் பைல்ஸ்' என்ற பெயரில் சில ஆதாரங்களை வெளியிட்டார்.

போலி வாக்காளர்கள் அப்போது பேசிய அவர், 'ஹரியானா சட்டசபை தேர்தலில், 25 லட்சம் போலி வாக்காளர்கள் மூலம், காங்கிரசின் வெற்றியை பா.ஜ., தட்டிப் பறித்துள்ளது. இதற்கு தேர்தல் கமிஷன் உடந்தையாக இருந்தது.

பிரேசில் நாட்டின் மாடல், மேத்யூஸ் பெரெரோ என்பவரின் புகைப்படம் வாக்காளர் பட்டியலில் இடம் பெற்றுள்ளது. இந்த ஒரே புகைப்படத்தை பயன் படுத்தி, ராய் தொகுதியில், 10 ஓட்டுச்சாவடிகளில் சீமா, ஸ்வீட்டி, சரஸ்வதி என, 22 பெயர்களில் போலியாக வாக்காளர்கள் உருவாக்கப்பட்டுள்ளனர்' என தெரிவித்து இருந்தார்.

இந்நிலையில், ராகுல் குறிப்பிட்ட பிரேசில் மாடல் மேத்யூஸ் பெரெரோ ஒரு ஆண் என்பதும், அவர் ஒரு புகைப்படக் கலைஞர் என்பதும் தெரியவந்துள்ளது. மேலும், ராகுல் வெளியிட்ட புகைப்படத்தில் இருக்கும் பெண், சிகை அலங்கார நிபுணர் என்பதும் தெரியவந்துள்ளது.

ஹரியானா தேர்தல் குறித்து அந்த பெண்ணின் புகைப்படத்தை ராகுல் வெளியிட்ட நிலையில், உலக அளவில் அது பேசுபொருளானது.

'இன்ஸ்டாகிராம்' இதனால், பதறிப்போன அந்தப் பெண், 'இன்ஸ்டாகிராம்' சமூக ஊடகத்தில் வீடியோ வெளியிட்டார். அதில், தன் பெயர் லாரிசா நேரி என போர்ச்சுகீஸ் மொழியில் அறிமுகம் செய்து கொண்ட அவர், அந்த வீடியோவில் கூறியிருப்பதாவது:

க டந்த, எட்டு ஆண்டு களுக்கு முன் எடுக்கப்பட்ட என் பழைய புகைப்படத்தை பயன்படுத்தியுள்ளனர். அப்போது எனக்கு, 18 அல்லது 20 வயது இருக்கும். இந்தியாவில் தேர்தலுக்காக என் புகைப்படம் பயன்படுத்தப்பட்டது பற்றி எனக்கு எதுவும் தெரியாது. என்னை இந்தியர் போல சித்தரித்து மக்களை ஏமாற்றப் பார்க்கின்றனர்.

இது என்ன பைத்தியக்காரத்தனம். எந்த உலகத்தில் நாம் வாழ்கிறோம். என் புகைப்படம் இணையத்தில் பரவியதும், நிருபர் ஒருவர் என்னை தொடர்பு கொண்டு பேட்டி எடுக்க முய ற்சித்தார். இன்ஸ்டாகிராமில் என்னை அடையாளம் கண்ட மற்றொருவர், அதன் வழியாகவே என்னிடம் பேச முயன்றார். அவரது அழைப்பை நான் ஏற்கவில்லை.

மர்மமான பி ரேசில் மாடல் என்ற பெயரில், இந்தியாவில் நான் பிரபலமடைந்து இருக்கிறேன். பிரேசிலின் பெலோ ஹாரிசான்டோவை சேர்ந்த போட்டோகிராபர் மேத்யூஸ் பெரெரோ தான் அந்த புகைப்படத்தை எடுத்தார்.

என் அனுமதியுடன் இணையதளங்களில் அதை வெளியிட்டார். இதனால், நான்கு லட்சம் முறை என் புகைப்படத்தை ஏரா ளமானோர் பதிவிறக்கம் செய்துள்ளனர்.

இவ்வாறு அதில் கூறியுள்ளார்.

காண்பித்தது போலியான அட்டை

ஹரியானா சட்டசபை தேர்தலில் முறைகேடுகள் நடந்திருப்பதாக, முனேஷ் என்ற வாக்காளரின் அடையாள அட்டையை ராகுல் காண்பித்திருந்தார். அதில், அந்த வாக்காளரின் புகைப்படத்திற்கு பதிலாக பிரேசில் மாடலின் புகைப்படம் இருந்தது. இந்நிலையில், 'ராகுல் காண்பித்தது போலியான வாக்காளர் அடையாள அட்டை' என, வாக்காளர் முனேஷ் விளக்கம் கொடுத்துள்ளார். இது குறித்து அவர் கூறியதாவது: ராகு ல் வெளியிட்ட வாக்காளர் அடையாள அட்டையில் இருப்பது என் பெயர் தான். ஆனால், அதில் இருக்கும் புகைப்படம் யாருடையது என்பது எனக்கு தெரியாது. என்னிடம் இருக்கும் வாக்காளர் அடையாள அட்டையில் என் புகைப்படமே உள்ளது. அதை காண்பித்து நான் ஓட்டளித்தேன். ராகுல் காண்பித்தது போலியான வாக்காளர் அடையாள அட்டையாக இருக்கலாம். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.








      Dinamalar
      Follow us