'வெயில் தாங்க முடியல': தலையில் தண்ணீர் ஊற்றிய ராகுல்
'வெயில் தாங்க முடியல': தலையில் தண்ணீர் ஊற்றிய ராகுல்
ADDED : மே 28, 2024 05:54 PM

ருத்ராபூர்: உத்தர பிரதேசத்தில் காங்கிரஸ் எம்.பி., ராகுல், பிரசாரத்தின்போது வெயில் தாக்கத்தால் தனது தலையில் தண்ணீர் ஊற்றினார். இந்த வீடியோ வைரலாகியுள்ளது.
லோக்சபா தேர்தலின் இறுதிக்கட்ட தேர்தல் ஜூன் 1ல் நடக்கிறது. இதற்காக அரசியல் கட்சிகள் பிரசாரத்தை தீவிரப்படுத்தியுள்ளன. அந்த வகையில் உத்தர பிரதேசத்தின் ருத்ராபூரில் நடந்த பிரசாரக்கூட்டத்தில் காங்கிரஸ் எம்.பி., ராகுல் பேசியதாவது: நாம் ஒவ்வொருவரும் பயாலஜிக்கல் முறையில் பிறந்துள்ளோம். ஆனால் பிரதமர் மோடி மட்டும் பயாலஜிக்கல் முறையில் பிறக்கவில்லை என்கிறார்.
அம்பானிக்கும், அதானிக்கும் உதவுவதற்காகதான் பரமாத்மா அவரை அனுப்பியுள்ளார், ஏழைகள், விவசாயிகளுக்கு உதவுவதற்காக அல்ல. உண்மையில் பரமாத்மா மோடியை உலகிற்கு அனுப்பியிருந்தால் அவர் ஏழைகள், விவசாயிகளுக்கு உதவியிருப்பார். இவ்வாறு அவர் பேசினார்.