அராஜகத்தின் சின்னமாக மாறிய ராகுல்; பாஜ கடும் தாக்கு
அராஜகத்தின் சின்னமாக மாறிய ராகுல்; பாஜ கடும் தாக்கு
ADDED : அக் 15, 2026 04:25 PM

புதுடில்லி: டில்லியில் நிருபர்கள் சந்திப்பில் லோக்சபா எதிர்க்கட்சி தலைவர் ராகுலை பாஜ தேசிய செய்தி தொடர்பாளர் கவுரவ் பாட்டியா கடுமையாக சாடினார்.
அவர் கூறியதாவது: ஜனநாயக போராட்டத்தின் வரம்புகளை ராகுல் மீறுகிறார். அரசியலமைப்பு நிறுவனங்களை சீர்குலைக்கிறார்; சுப்ரீம்கோர்ட்டை மதிக்கவில்லை; அராஜகத்தின் சின்னமாக மாறிவிட்டார். ராகுல் முதிர்ச்சியற்ற, பொறுப்பற்ற மற்றும் அரசியலமைப்பு ரீதியாக படிப்பு அறிவு இல்லாத நபர். நான் சில விஷயங்களை முன்வைக்க விரும்புகிறேன். ராகுலை மக்கள் எவ்வாறு இந்திய மக்கள் பார்க்கிறார்கள் என்பது அனைவருக்கும் தெரியும்.
இப்படிப்பட்ட ஒரு நபர் எதிர்க்கட்சி தலைவராக இருப்பது துரதிர்ஷ்டமானது. ஆர்ப்பாட்டம் செய்தவதற்கு உரிமை அரசியலமைப்பு வரம்புகளை மீறுவதற்கோ, ஒழுங்கற்ற நடத்தையில் ஈடுபடுவதற்கோ யாருக்கும் உரிமை அளிக்கவில்லை. நீதிமன்ற வளாகம் உட்பட எந்தவொரு இடத்திலும் கோஷங்களை எழுப்புவதையோ, வன்முறை செயல்களில் ஈடுபடுவதையோ நியாயப்படுத்த முடியாது. முதலில் அரசியலமைப்பு சட்டத்தை படியுங்கள். காங்கிரஸ் அரசியலைப்பு சட்டத்திற்கு எதிராக செயல்படுகிறது. இவ்வாறு கவுரவ் பாட்டியா கூறினார்.
