ADDED : மார் 17, 2024 11:36 PM

'இண்டியா' கூட்டணியில் உள்ளவர்களுக்கு இடையே ஏராளமான முரண்பாடுகள், மோதல்கள் இருக்கும் போது, அவர்களால் எப்படி பா.ஜ.,வுக்கு சவாலாக இருக்க முடியும்? இண்டியா கூட்டணியின் மிகப்பெரிய சிக்கலே ராகுல் தான்.
முக்தர் அப்பாஸ் நக்வி, முன்னாள் மத்திய அமைச்சர், பா.ஜ.,
தைரியம் இருக்கிறதா?
கர்நாடக பா.ஜ.,வினர் என்னை வாரிசு அரசியல்வாதி என குறிப்பிடுகின்றனர். இதே வார்த்தையை எடியூரப்பா மகன் ராகவேந்திரா, விஜயேந்திரா, பசவராஜ் பொம்மை, தேஜஸ்வி சூர்யா ஆகியோருக்கு பயன்படுத்தும் தைரியம் அவர்களுக்கு உள்ளதா?
பிரியங்க் கார்கே, கர்நாடக அமைச்சர், -
காங்கிரஸ்அரசின் கரங்களாக செயல்படுகிறது!
மேற்கு வங்கத்தில் ஏழு கட்டங்களாக தேர்தல் நடத்தப்படுவது, தேர்தல் ஆணையம் அரசின் கரங்களாகச் செயல்படுவதையே காட்டுகிறது. தேர்தல் கமிஷனர்கள் தேர்வுக் குழுவில், உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி இடம்பெற வேண்டும் என்ற உத்தரவு மீறப்பட்டுள்ளது.
கபில் சிபல், ராஜ்யசபா எம்.பி., -- சுயேச்சை

