தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/இந்தியா/பெண் போலீசார் மீது தாக்குதல்: ராகுல், பிரியங்கா மீது வழக்குப்பதிவு

பெண் போலீசார் மீது தாக்குதல்: ராகுல், பிரியங்கா மீது வழக்குப்பதிவு

பெண் போலீசார் மீது தாக்குதல்: ராகுல், பிரியங்கா மீது வழக்குப்பதிவு


UPDATED : அக் 08, 2026 11:27 PM

ADDED : அக் 08, 2026 09:14 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : அக் 08, 2026 11:27 PM ADDED : அக் 08, 2026 09:14 PM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

புதுடில்லி: தலைமை தேர்தல் கமிஷனர் ஞானேஷ் குமார் பதவி விலக வலியுறுத்தி டில்லியில் நடந்த போராட்டத்தில், பெண் போலீசார் மீது தாக்குதல் நடத்தியதாக, காங்கிரஸ் எம்.பி.,க்கள் ராகுல், பிரியங்கா உள்ளிட்டோர் மீது மூன்று வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.

எஸ்.ஐ.ஆர்., எனப்படும் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப் பணிக்கு எதிராகவும், தலைமை தேர்தல் கமிஷனர் ஞானேஷ் குமார் பதவி விலக வலியுறுத்தியும், காங்கிரஸ் தலைமையிலான, 'இண்டி' கூட்டணியில் இடம்பெற்றுள்ள எதிர்க்கட்சிகள் டில்லியில் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளன.

கடந்த 6ம் தேதி, தேர்தல் கமிஷன் அலுவலகத்தை நோக்கி பேரணியாக சென்றபோது, அவர்கள் அனைவரும் தடுத்து நிறுத்தப்பட்டு கைது செய்யப்பட்டனர். நேற்று முன்தினம் ஜந்தர் மந்தர் பகுதியில் போராட்டம் நடத்த பேரணியாக சென்ற காங்.,கை சேர்ந்த லோக்சபா எதிர்க்கட்சி தலைவர் ராகுல், அக்கட்சியைச் சேர்ந்த லோக்சபா எம்.பி., பிரியங்கா உள்ளிட்டோர் தடுத்து நிறுத்தப்பட்டனர்.

அப்போது, போலீசார், எதிர்க்கட்சியினர் மற்றும் அவர்களின் ஆதரவாளர்கள் மத்தியில் தள்ளுமுள்ளு ஏற்பட்டது. போலீசார் வைத்திருந்த தடுப்புகளை தாண்டிச் சென்ற ராகுல் போராட்டத்தில் ஈடுபட்டார். பல கட்ட முயற்சிக்கு பின், ராகுல், பிரியங்கா உள்ளிட்டோர் குண்டுகட்டாக கைது செய்யப்பட்டனர்; பின்னர் விடுவிக்கப்பட்டனர். கைது நடவடிக்கையின் போது, பெண் போலீசார் மீது ராகுல், பிரியங்கா உள்ளிட்டோர் தாக்குதல் நடத்தியதாக புகார் எழுந்துள்ளது.

இது தொடர்பாக, ராகுல், பிரியங்கா மற்றும் போராட்டத்தில் ஈடுபட்ட காங்கிரஸ் நிர்வாகிகள் மீது மூன்று வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. போலீசாரை தாக்குதல், அவர்களை பணி செய்ய விடாமல் தடுத்தல், அவர்களிடம் முறைகேடாக நடந்து கொள்ளுதல் ஆகிய பிரிவுகளில் வழக்குப் பதிவு செய்யப்பட்டதாக போலீஸ் தரப்பில் கூறப்படுகிறது.

இதற்கிடையே, மூன்றாம் நாளாக நேற்றும் எதிர்க்கட்சியினர் டில்லியில் போராட்டத்தில் ஈடுபட்டனர். காங்., தேசிய தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, ராகுல் உள்ளிட்டோர் கன்னாட் பிளேசில் இருந்து ராஜ்காட் நோக்கி 4 கி.மீ., தூரம் ஊர்வலமாக சென்றனர். பின், அங்குள்ள காந்தி சமாதியில் மலரஞ்சலி செலுத்திய அவர்கள், பிரார்த்தனை செய்துவிட்டு கலைந்து சென்றனர்.

இந்த விவகாரம் தொடர்பாக, எதிர்க்கட்சி எம்.பி.,க்கள் குழு, ஜனாதிபதி திரவுபதி முர்முவை இன்று சந்திக்க உள்ளது. மல்லிகார்ஜுன கார்கே, ராகுல், சமாஜ்வாதி கட்சி தலைவர் அகிலேஷ் யாதவ், ராஷ்ட்ரிய ஜனதா தள தலைவர் தேஜஸ்வி, திரிணமுல் காங்கிரஸ் தலைவர் மம்தா ஆகியோர் அடங்கிய குழுவுக்கு ஜனாதிபதி மாளிகை ஒப்புதல் அளித்துள்ளது.

அத்துமீறிய ராகுல்


பா.ஜ., கண்டனம்
போராட்டத்தின் போது, பெண் போலீசாரிடம் ராகுல் தவறாக நடந்து கொண்டதாகவும், பிரியங்கா அவர்களை தாக்கியதாகவும் பா.ஜ., குற்றஞ்சாட்டியுள்ளது. இது தொடர்பான வீடியோவும் வெளியிடப்பட்டுள்ளது. இதில், பெண் போலீசை பிரியங்கா முழங்கையால் தாக்குவதும், ராகுல் பெண் போலீஸ் முதுகை பிடித்து தள்ளிவிடும் காட்சியும் இடம்பெற்றுள்ளது. இது குறித்து பா.ஜ., செய்தி தொடர்பான பிரதீப் பண்டாரி கூறுகையில், 'போராட்டங்கள் மூலம் நேபாளம் மற்றும் வங்கதேசம் போன்ற சூழலை உருவாக்க காங்கிரஸ் விரும்புகிறது. அதிகாரத்தை கைப்பற்ற முயலும் ராகுல், அராஜகத்தில் ஈடுபடுகிறார். இது ஏற்றுக்கொள்ள முடியாதது' என, கண்டனம் தெரிவித்துள்ளார்.



ஞானேஷ்குமாருக்கு


கூடுதல் பாதுகாப்பு
எதிர்க்கட்சியினரின் போராட்டத்தின் நடுவே, தலைமை தேர்தல் கமிஷனர் ஞானேஷ் குமாருக்கு வழங்கப்பட்டு வரும் 'இசட் பிளஸ்' பிரிவு பாதுகாப்பை மத்திய அரசு மேலும் பலப்படுத்தியுள்ளது. டில்லியில் உள்ள அவரது வீடு, தேர்தல் கமிஷன் அலுவலகங்களில் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது. ஒவ்வொரு பார்வையாளரும் தீவிர கண்காணிப்புக்கு பின்னரே அனுமதிக்கப்பட்டு வருகின்றனர். துணை ராணுவப் படையினரும் பாதுகாப்பு பணியில் குவிக்கப்பட்டுள்ளனர். ஞானேஷ் குமாரின் உத்தர பிரதேசத்தில் உள்ள ஆக்ரா வீட்டிலும் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது.



தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us