ADDED : நவ 02, 2026 03:48 PM

புதுடில்லி: பாஜ செய்தித் தொடர்பாளர் பிரதீப் பண்டாரி வெளியிட்ட அறிக்கையில் கூறியதாவது: காங்கிரஸ் பொதுச் செயலாளர் ஆகவும், ராகுலின் சகோதரியாகவும் இருக்கும் பிரியங்கா ராம்லீலா மைதானத்தில் பேச அனுமதிக்கப்படவில்லை. அவர் பேசுவதை ராகுல் தடுத்தாரா?
இங்கு மட்டுமில்லை. மாதிரி பார்லிமென்ட் கூட்டத்தின் போதும் அவரை பேச அனுமதிக்கவில்லை. இரண்டாவது வரிசையில் பிரியங்காவுக்கு நாற்காலி நாற்காலி போடப்பட்டது.
பிரியங்கா ஆதரவாளர்களால், ராகுல் ஆதரவாளர்கள் பாதுகாப்பு இல்லாதது போல் உணர்கின்றனர். இதனால், பிரியங்கா ஆதரவாளர்கள் ஓரங்கட்டப்படுகின்றனர். நாட்டு மக்களை பற்றியோ, காங்கிரசை பற்றியோ ராகுல் பேசவில்லை. மாறாக, அவர் பிரியங்காவை ஓரங்கட்ட மட்டுமே முயற்சிக்கிறார்.
ராகுலுக்கும், பிரியங்காவுக்கும் இடையே நடக்கும் மோதலால் காங்கிரஸ் இரு பிரிவாக பிளவுபட்டுள்ளது. இந்த மோதலை மக்கள் பாப்கார்ன் சாப்பிட்டு கொண்டு வேடிக்கை பார்க்கின்றனர். இவ்வாறு பிரதீப் பண்டாரி கூறினார்.
