ADDED : ஆக 20, 2024 02:52 AM

புதுடெல்லி: லோக்சபா எதிர்கட்சி தலைவர் ராகுல் நேற்று கால் டாக்ஸியில் சவாரி செய்தார்.
காங்.. எம்.பி. ராகுல் பார்லிமென்ட் தேர்தலுக்கு முன்பாக நெடுந்தூர பயணம் மேற்கொள்ளும் லாரி ஒட்டுனர்கள், விவசாயிகள், உணவு டெலிவரி செய்யும் தொழிலாளர்கள் , செருப்பு தைக்கும் தொழிலாளி, சலூன் கடை தொழிலாளி ஆகியோரை நேரில் சந்தித்து அவர்களின் துயரங்களை கேட்டறிந்தார்.
இந்நிலையில் நேற்று தனியார் கால் டாக்ஸி ஒன்றை செயலி மூலம் புக் செய்து, கிழக்கு டில்லியில் உள்ள கோண்ட்வாலியில் இருந்து ஜன்பத் இல்லம் வரை பயணம் செய்தார். இந்த பயணத்தின் போது வாடகை கால் டாக்ஸி ஓட்டுனர்கள் சந்திக்கும் சூழல், வருமானம், பணமதிப்பிழப்பு உள்ளிட்டவையினால் ஏற்பட்ட தாக்கங்கள் ஆகியவை குறித்து கேட்டறிந்தார்.
இதனை வீடியோவா தனது எக்ஸ் தளத்தில் வெளியிட்டுள்ளார். அதில் வாடகை வாகன ஓட்டுநர்களுக்கு கைக்கு கிடைக்கும் வருவாய், வாய்க்கு கூட பத்தாத சூழலில் அவர்கள் பிழைத்துக் கொண்டிருக்கிறார்கள். காங்கிரஸ் ஆளும் மாநிலங்களில் கொள்கை முடிவு எடுக்கப்படும் என்றார்.

