ADDED : ஆக 23, 2025 10:26 PM

கதிஹார்: பீஹாரில் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து ஆக., 17 முதல் காங்கிரஸ் எம்பி ராகுல் நடைபயணம் மேற்கொண்டு வருகிறார். இதன் ஒரு பகுதியாக, கதிஹாரில் விவசாயிகளை சந்தித்து பேசினார்.
பின்னர் நடந்த கூட்டத்தில் பங்கேற்று ராகுல் பேசியதாவது; இப்போது மாலை நேரத்தில் தொலைக்காட்சியைப் பாருங்கள். நீங்கள் இந்த கோஷத்தைப் பார்ப்பதில்லை. நீங்கள் அதை எங்கும் பார்க்க மாட்டீர்கள். நீங்கள் இந்த கூட்டத்தைப் பார்க்க மாட்டீர்கள், ஏனென்றால் இது ஏழை மக்களின் கூட்டம். இது தொழிலாளர்களின் கூட்டம். விவசாயிகளின் கூட்டம். ஓட்டுகள் திருடப்படுவதை நாம் அனுமதிக்கக் கூடாது, என்றார். 'தொடர்ந்து, ராஷ்டிரிய ஜனதா தளம் கட்சியின் தலைவர் தேஜஸ்வி யாதவ் கூறியதாவது; சாதிச் சான்றிதழ் மற்றும் குடியிருப்பு சான்றிதழ் கொடுப்பதற்காக மட்டும் இந்த அதிகாரிகளும், ஊழல் அரசும் ரூ.4,000 கோடி சம்பாரித்துள்ளனர். பாஜவினர் இந்தப் பணத்தை தேர்தல்களில் பயன்படுத்துவார்கள். அதனால்தான் ஊழல் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. ஊழல் மற்றும் குற்ற சம்பவங்க

