ADDED : ஆக 24, 2011 03:40 AM

புதுடில்லி : லோக்பால் மசோதா விவகாரத்தில், காங்கிரஸ் பொதுச் செயலர் ராகுல் தனது மவுனத்தை கலைத்துக் கொள்ள வேண்டும் என்று வலியுறுத்தி, அவரது அலுவலகம் முன்பு ஹசாரே ஆதரவாளர்கள் நேற்று தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.
அன்னா ஹசாரே ஆதரவாளர்கள், எம்.பி.,க்கள் வீடுகள் முன் அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இதனிடையே, உத்தர பிரதேச மாநிலத்தில் அமேதி தொகுதியில் உள்ள காங்கிரஸ் பொதுச் செயலர் ராகுல் அலுவலகம் முன், நேற்று நூற்றுக்கணக்கானோர் அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது, லோக்பால் விவகாரத்தில், ராகுல் தன் மவுனத்தை கலைத்துக் கொள்ள வேண்டும் என்று ஹசாரே ஆதரவாளர்கள் கோஷம் எழுப்பினர்.இதே போன்று, மத்திய சட்டத்துறை அமைச்சர் சல்மான் குர்ஷித், உ.பி., காங்கிரஸ் தலைவர் ரீட்டா பகுகுணா ஜோஷி உள்ளிட்டோர் வீடுகள் முன்பும் தர்ணா போராட்டங்கள் நடந்தன.