துமகூரு- - சித்ரதுர்கா - -தாவணகெரே ரயில் பாதை லோக்சபாவில் ரயில்வே அமைச்சர் அஸ்வினி அறிவிப்பு
துமகூரு- - சித்ரதுர்கா - -தாவணகெரே ரயில் பாதை லோக்சபாவில் ரயில்வே அமைச்சர் அஸ்வினி அறிவிப்பு
ADDED : டிச 14, 2024 11:07 PM
''துமகூரு- - சித்ரதுர்கா - தாவணகெரே நேரடி ரயில் பாதை திட்டத்திற்காக 2,157 கி.மீ., துாரம் நிலம் கையகப்படுத்தப்பட்டு, அந்த பகுதியில் பணிகள் துவங்கப்பட்டுள்ளன,'' என, ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் தெரிவித்துள்ளார்.
துமகூரு - -சித்ரதுர்கா- - தாவணகெரே நேரடி ரயில் பாதைக்கான நிலம் கையகப்படுத்துதல், வனத்துறை அனுமதி, நிலுவையில் உள்ள பிரச்னைகள் குறித்து, ரயில்வே துறை, மாநில அரசுடன் ஏதேனும் பேசுகின்றனரா; 2024- - 25 ரயில்வே பட்ஜெட்டில் கர்நாடகாவிற்கு ஒதுக்கப்பட்ட புதிய ரயில் திட்டங்கள் என்ன நிலையில் உள்ளன என, லோக்சபாவில் சித்ரதுர்கா பா.ஜ., - எம்.பி., கோவிந்த் கார்ஜோல் கேள்வி எழுப்பியிருந்தார்.
191 கி.மீ., துாரம்
இதற்கு, ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் அளித்த பதில்:
துமகூரு - -தாவணகெரே இடையே 191 கி.மீ., துாரத்திற்கு, 2024 மார்ச் வரை, 359.32 கோடி ரூபாய் அனுமதிக்கப்பட்டுள்ளது. 2024- - 25 பட்ஜெட்டில் 150 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது.
ரயில்வே திட்டங்களை விரைந்து முடிக்க, நிலம் கையகப்படுத்துதல், காடுகளை அழித்தல், மாநில அரசின் மானியப் பங்கீட்டை உடனடியாக வழங்குதல், நிலம் கையகப்படுத்தப்பட்ட இடத்தில் காணப்படும் ஆக்கிரமிப்புகளை அகற்றுதல், திட்டப்பகுதியில் சட்டம் ஒழுங்கைப் பேணுதல், துமகூரு -- சித்ரதுர்கா - -தாவணகெரே நேரடி ரயில் வழித்தடப் பணிகள் நிறைவேற்றுவதில் ஆர்வமாக உள்ளோம்.6,159 கி.மீ., துாரம்
6,159 கி.மீ., துாரம்
பட்ஜெட்டில், மாநிலம் வாரியாக மானியம் ஒதுக்காமல், ரயில்வே துறை சார்பில் மானியம் ஒதுக்கப்பட்டுள்ளது.
கடந்த 3 ஆண்டுகளில், தென்மேற்கு ரயில்வேக்கு, 19 புதிய வழித்தடங்கள், 37 இரட்டிப்புப் பாதைகள் என 56 புதிய திட்டங்களில் 6,159 கி.மீ., துாரம் பணிகள் மேற்கொள்ள அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.
ஏப்ரல் 1ம் தேதி அறிக்கையின்படி, 21 புதிய வழித்தடங்கள், 3,840 கி.மீ., துாரத்தில் 47,016 கோடி ரூபாய் மதிப்பிலான பல்வேறு திட்டங்கள் நடந்து வருகின்றன. இதில், 1,302 கி.மீ., துாரம் சாலையை முடிக்க ஏற்கனவே 17,383 கோடி ரூபாய் செலவிடப்பட்டுள்ளது.
கடந்த 2009 முதல் 2014 வரை ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சிக் காலத்தில் தென்மேற்கு ரயில்வே துறைக்கு 835 கோடி ரூபாய் மானியம் ஒதுக்கப்பட்ட நிலையில், மோடி தலைமையிலான அரசு, 2024- - 25ல் 7,559 கோடி ரூபாய் மானியம் ஒதுக்கியது.
கடந்த 2009 முதல் 2014 வரை 565 புதிய ரயில் பாதைகளும்; 2014 முதல் 2024 வரை 1,633 கி.மீ புதிய ரயில் பாதைகளும் அமைக்கப்பட்டுள்ளன.
இவ்வாறு அவர் கூறினார்
- நமது நிருபர் -.