ADDED : ஜன 11, 2025 11:52 PM

கன்னோஜ்: உத்தர பிரதேசத்தின் கன்னோஜ் ரயில் நிலையத்தில் புதிதாக கட்டப்படும் கட்டடத்தின் கூரை இடிந்து ஏற்பட்ட விபத்தில், இடிபாடுகளில் சிக்கி, 23 பேர் காயம் அடைந்தனர்.
உத்தர பிரதேசத்தில் உள்ள கன்னோஜ் ரயில் நிலையத்தில் மறுசீரமைப்பு பணியின் ஒரு பகுதியாக புதிய கட்டடம் கட்டும் பணி நடக்கிறது. இந்த பணியில் நேற்று, 35 தொழிலாளர்கள் ஈடுபட்டிருந்தனர். இந்நிலையில், நேற்று புதிய கட்டடத்தின் கூரை திடீரென இடிந்து விழுந்தது.
இதில் தொழிலாளர்கள் 23 பேர் சிக்கியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இவர்களில் சிலர் இடிபாடுகளில் இருந்து மீட்கப்பட்டனர். விபத்து பற்றி தகவல் அறிந்து வந்த தேசிய மற்றும் மாநில பேரிடர் மீட்புப்படையினர் மீட்புப்பணியில் ஈடுபட்டுள்ளனர்.
விபத்து குறித்து விசாரணை நடத்த வடகிழக்கு ரயில்வே நிர்வாகம், தலைமை இன்ஜினியர் தலைமையில் மூவர் குழுவை அமைத்துள்ளது.

