UPDATED : ஆக 20, 2024 08:36 PM
ADDED : ஆக 20, 2024 08:26 PM

புதுடில்லி: ராஜ்யசபா எம்.பி., பதவிகளுக்காக 9 வேட்பாளர்கள் பெயரை இன்று ( ஆக.,20) பா.ஜ., அறிவித்தது.
பல்வேறு
மாநிலங்ககளில் ராஜ்யசபா எம்.பி.க்களாக இருந்த 10 பேர் தங்கள் பதவிகாலம்
நிறைவடையும் முன்பாகவே, நடந்து முடிந்த லோக்சபா தேர்தலில் போட்டியிட்டு
வெற்றி பெற்றனர். இரு எம்.பி.க்கள் பதவியை ராஜினாமா செய்தனார்.
இதனால்
காலியாக உள்ள 12 ராஜ்யசபா எம்.பி., பதவிக்கு வரும் செப். 03-ல் தேர்தல்
நடக்கிறது. இதில் 9 இடங்களுக்கு வேட்பாளர்களை பா.ஜ., களம்
இறக்கியுள்ளது.
1) ரவனீத்சிங்பிட்டு - ராஜஸ்தான்.
2) ஜார்ஜ் குரியன் - மத்திய பிரதேசம்.
3) கிரண் சவுத்ரி - ஹரியானா.
4) மம்தா மோகன்தா -ஒடிசா.
5)ராஜிவ் பட்டாச்சார்ஜி - திரிபுரா.
6) தையார்ஷில் பாட்டில் - மஹாராஷ்டிரா.
7) எம்.கே.மிஸ்ரா -பீஹார்.
8) ரஞ்சன்தாஸ் -அசாம்.
9) ராமேஸ்வர் தெலி -அசாம்.