மோடி எதிர்ப்பு பத்திரிகையாளருக்கு ராஜ்யசபா எம்.பி., பதவி:பேசுவது ஒன்று செய்வது வேறா? சமுகவலைதளங்களில் விமர்சனம்
மோடி எதிர்ப்பு பத்திரிகையாளருக்கு ராஜ்யசபா எம்.பி., பதவி:பேசுவது ஒன்று செய்வது வேறா? சமுகவலைதளங்களில் விமர்சனம்
UPDATED : பிப் 11, 2024 08:26 PM
ADDED : பிப் 11, 2024 08:17 PM

பிரதமர் மோடியை கடுமையாக எதிர்க்கும் பத்திரிகையாளர் சாகரிகா கோஸ், மம்தா பானர்ஜியின் திரிணமுல் காங்கிரஸ் சார்பில் ராஜ்யசபாவுக்கு தேர்வு செய்யப்பட உள்ளார்.
இவரது கணவர் தான், பிரபல பத்திரிகையாளர் ராஜ்தீப் சர்தேசாய்.
தம்பதி இருவரும், பிரதமர் மோடியின் தீவிர எதிர்ப்பாளர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
சாகரிகா கோஸ் (2018) அன்று சொன்னது
ஊடகவியலாளர்கள், எந்தவொரு அரசியல் கட்சிக்கும் விசுவாசமாக இல்லாமல் அரசியலில் இருந்து விலகி, இருக்க வேண்டும். அவ்வாறு இல்லாமல் சுதந்திரத்தை சமரசம் செய்து கொள்வது, எழுத்தாளர்கள் தங்களைத் தாங்களே செய்து கொள்ளக்கூடிய மோசமான விஷயம். இந்தியாவின் சிவில் சமூகத்தை வலுப்படுத்துவோம், தாராளவாத ஜனநாயகத்தை வலுப்படுத்துவோம், நீதிக்காக பாடுபடுவோம். என்று சாகரிகா கோஸ் கூறி இருந்தார்.
அவ்வாறு கூறிய சாகரிகா கோஸ்ற்கு தற்போது மேற்கு வங்க முதல்வரும் திரிணாமுல் காங்கிரஸ் தலைவருமான மம்தா பானர்ஜி, ராஜ்யசபா எம்.பி பதவி அளிப்பது எந்த வகையில் பொருந்தும் என சமுக வலைதளைங்களில் விமர்சனம் எழுந்துள்ளது.

