தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/இந்தியா/ ராமர் கோவில் உண்டியல் திருட்டு விவகாரம்: கவலையில் ஆர்.எஸ்.எஸ்.,

ராமர் கோவில் உண்டியல் திருட்டு விவகாரம்: கவலையில் ஆர்.எஸ்.எஸ்.,

ராமர் கோவில் உண்டியல் திருட்டு விவகாரம்: கவலையில் ஆர்.எஸ்.எஸ்.,

4


ADDED : ஜூலை 05, 2026 02:01 AM

Follow on GoogleFavourite on Google

4

ADDED : ஜூலை 05, 2026 02:01 AM


4
Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

லக்னோ: உ த்தர பிரதேசத்தின் அயோத்தியில், ராமர் கோவில் கட்ட ஒரு பெரும் இயக்கமே நடத்தி போராடி, கடைசியில் கோவிலையும் கட்டி முடிக்க, ஆர்.எஸ்.எஸ்., அமைப்பு பெரும் உதவியாக இருந்தது. ஆனால், சமீபத்தில் ராமர் கோவில் உண்டியல் திருட்டு விவகாரம், ஆர்.எஸ்.எஸ்., தலைவர்களை கவலையில் ஆழ்த்தியுள்ளது.

ஆர்.எஸ்.எஸ்., என்றாலே ஒழுக்கம், கடமை, நேர்மை என, சொல்வது வழக்கம். இந்த குணங்கள் இப்போது ஆர்.எஸ்.எஸ்., அமைப்பில் குறைந்து வருகிறதோ என்பதை, உண்டியல் திருட்டு அம்பலப்படுத்தி உள்ளது.

இந்த திருட்டு விவகாரம், ஆர்.எஸ்.எஸ்., தலைவர் மோகன் பாகவத்தை கடுப்பாக்கியுள்ளது. இதில் சம்பந்தப்பட்ட நபர் எவ்வளவு பெரிய அதிகார மையமாக இருந்தாலும் சரி, அவர்களை கைது செய்தே ஆக வேண்டும் என, கூறியுள்ளார். இது தொடர்பாக, பிரதமர் மோடியிடமும் அவர் பேசி உள்ளாராம்.

ஏற்கனவே உ.பி., அரசின் சிறப்பு புலனாய்வு குழு, எட்டு பேரை கைது செய்துள்ளது. ராம ஜென்மபூமி அறக்கட்டளையின் பொதுச்செயலராக இருந்தவர், சம்பத் ராய். இவர், ஆர்.எஸ்.எஸ்., அமைப்பைச் சேர்ந்தவர். கோவில் கட்டுமான பணிகளை மேற்பார்வையிட, அப்போது இவரை செயலராக நியமித்தது மத்திய அரசு. இப்போது திருட்டு விவகாரத்தில் தார்மிக பொறுப்பேற்று பதவி விலகியுள்ளார்.

பொதுவாக, பிரபல கோவிலின் அறக்கட்டளை எனில், அந்த மாநில முதல்வர், அதில் உறுப்பினராக முக்கிய பதவி வகிப்பார். ஆனால், அயோத்தி அறக்கட்டளையில், முதல்வர் யோகி ஆதித்யநாத்திற்கு பதவி அளிக்கவில்லை. அவர், ஆர்.எஸ்.எஸ்., அமைப்பை சேர்ந்தவர் அல்ல என்பதால் தான், பதவி கொடுக்கவில்லை என, சொல்லப்பட்டது. ஆனால் இப்போது, ஆர்.எஸ்.எஸ்.,சைச் சேர்ந்த சம்பத் ராய், இந்த திருட்டிற்கு காரணமாகி விட்டார். விரைவில், அவர் கைதாகலாம் என, கூறப்படுகிறது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us