அயோத்திக்கு சீதை பிறந்த நேபாளத்தில் இருந்து 1,100 பெட்டிகளில் சீர்வரிசை வருகை
அயோத்திக்கு சீதை பிறந்த நேபாளத்தில் இருந்து 1,100 பெட்டிகளில் சீர்வரிசை வருகை
UPDATED : ஜன 04, 2024 10:41 AM
ADDED : ஜன 04, 2024 10:38 AM

அயோத்தி: உத்தரபிரதேசத்தின் அயோத்தியில் ஜன.,22ல் நடக்க உள்ள ராமர் கோயில் கும்பாபிஷேகத்தை முன்னிட்டு, சீதை பிறந்த நேபாளத்தில் இருந்து 1,100 பெட்டிகளில் சீர்வரிசைப் பொருட்கள் வந்துள்ளன.
பெட்டிகளில் ஏராளமான தங்கம் மற்றும் வெள்ளி நகைகள், உயர்தரமான ஆடைகள், பாத்திரங்கள், அலங்காரப் பொருட்கள், உலர் பழங்கள் மற்றும் அரிசி ஆகியவை நேபாளத்தில் இருந்து அனுப்பி வைத்துள்ளனர். நேபாளத்தில் பாயும் 16 நதிகளிலிருந்து புனித நீரும் அனுப்பி வைத்துள்ளனர். அவைகள் அயோத்தியை வந்தடைந்துள்ளன.
இது பாரதப் பாரம்பரிய வழக்கத்தில் திருமணமாகி கணவன் வீட்டிற்குச் செல்லும் பெண்ணிற்கு கொடுத்து அனுப்பும் சீர்வரிசையைப் போன்றது என நேபாள ராம பக்தர்கள் தெரிவித்துள்ளனர்.