ADDED : பிப் 17, 2024 05:01 AM

எதிர்க்கட்சியினர் அவமதிப்பு
மாநில மக்களின் வாழ்க்கையை கட்டமைக்கும் பட்ஜெட். ஜனநாயக முறையில் பட்ஜெட்டை புறக்கணித்தது, எதிர்க்கட்சித் தலைவர்கள், மாநில மக்களை அவமதித்துள்ளனர்.
-சிவகுமார், துணை முதல்வர், காங்.,
எப்படி மாற்றுவது?
மாநில அரசின் 2024 - 25ம் ஆண்டுக்கான பட்ஜெட், முதல்வர் சித்தராமையாவின் அரசியல் பேச்சு போன்று உள்ளது. மாநிலத்தை எப்படி பொருளாதார சக்தியாக மாற்றுவது என்பது குறித்த ஆக்கபூர்வமான திட்டங்கள் எதுவும் இல்லை.
-பிரஹலாத் ஜோஷி, மத்திய அமைச்சர், பார்லிமென்ட் விவகார துறை
டி.பி.ஆர்., பட்ஜெட்
இது டி.பி.ஆர்., பட்ஜெட். புதிதாக திட்டத்தை அறிவிக்கும் முன்பு, அரசு டி.பி.ஆர்., என்ற முழுமையான திட்ட அறிக்கை தயாரிக்கும். இது என்னவாகும் என்பது நம் அனைவருக்கும் தெரியும்.
-குமாரசாமி, முன்னாள் முதல்வர், ம.ஜ.த.,
நமது பங்களிப்பு என்ன?
இவ்வளவு மோசமான பட்ஜெட்டை நாங்கள் எதிர்பார்க்கவில்லை. மத்திய அரசை குற்றம் சாட்டுவதாகவே உள்ளது. மாநிலத்தின் வளர்ச்சிக்கான நமது பங்களிப்பை எங்கும் குறிப்பிடவில்லை.
-எடியூரப்பா, முன்னாள் முதல்வர், பா.ஜ.,
ஏமாற்றம்
பட்ஜெட் என்பது ஒரு தீவிரமான மற்றும் புனிதமான அரசியலமைப்பு கடமை. இந்த பட்ஜெட் மிகவும் மந்தமான, வளர்ச்சி இல்லாத, தொலை நோக்கு பார்வையற்ற பட்ஜெட். எதிர்பார்ப்புகள் அனைத்தும் பொய்யானது.
-அசோக், சட்டசபை எதிர்க்கட்சி தலைவர், பா.ஜ.,
பின்னோக்கி பயணம்
விவசாயிகளுக்கு எதிரான பட்ஜெட்டை தாக்கல் செய்துள்ளார். மாநில வளர்ச்சியில் எந்த முன்னேற்றமும் இல்லை. மாநிலத்தை 20 ஆண்டுகள் பின்னோக்கி அழைத்து செல்லும் பட்ஜெட். இளைஞர்களுக்கான திட்டம் இல்லை.
-விஜயேந்திரா, மாநில தலைவர், பா.ஜ.,
தோல்வி மறைப்பு
தோல்வியை மறைக்க பொய்யான அரசியல் பட்ஜெட். 1.5 லட்சம் கோடி ரூபாய் கடன் வாங்கி சாதனை படைத்துள்ளார். பட்ஜெட்டின் புனிதத்தை சித்தராமையா கெடுத்துவிட்டார்.
-பசவராஜ் பொம்மை, முன்னாள் முதல்வர், பா.ஜ.,
வளர்ச்சிக்கானது
பெங்களூரு வளர்ச்சிக்கான பட்ஜெட். முதல்வர் சித்தராமையா, துணை முதல்வர் சிவகுமாருக்கு எனது வாழ்த்துகள். பட்ஜெட்டை விமர்சனம் செய்வது, அவரவர்களின் தனிப்பட்ட கருத்து.
சோமசேகர், எம்.எல்.ஏ., -- பா.ஜ.,