லிப்ட் கேட்டு வந்த கல்லூரி மாணவி பலாத்காரம்: தலைமறைவான நபருக்கு போலீஸ் வலைவீச்சு
லிப்ட் கேட்டு வந்த கல்லூரி மாணவி பலாத்காரம்: தலைமறைவான நபருக்கு போலீஸ் வலைவீச்சு
ADDED : ஆக 18, 2024 05:36 PM

பெங்களூரு: டூவீலரில் லிப்ட் கேட்டு வந்த பெண்ணை பலாத்காரம் செய்துவிட்டு தலைமறைவான நபரை போலீசார் தேடி வருகின்றனர்.
இது தொடர்பாக போலீசார் கூறியதாவது: கல்லூரி படிக்கும் 21 வயதான மாணவி ஒருவர், கோரமங்கலா பகுதியில் நண்பர்கள் ஏற்பாடு செய்த நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்றுவிட்டு வீடு திரும்பினார். அடையாளம் தெரியாத நபர் ஒருவரிடம் டூவீலரில் லிப்ட் கேட்டு பயணித்தார். அந்த நபர், மாணவி சொல்லும் பாதையில் செல்லாமல் வேறு பகுதிக்கு அழைத்து சென்று பலாத்காரம் செய்துள்ளார்.
மாணவியின் மொபைலில் இருந்து ஆபத்து கால செய்தி மற்றும் தகவலை தொடர்ந்து பெண்ணின் நண்பர்கள் தேடிச்சென்றனர். ஓசூர் சர்வீஸ் சாலையில் பாதிக்கப்பட்ட பெண்ணை மீட்டு மருத்துவமனையில் அனுமதித்தனர். அப்போது, அந்த இடத்தில் பேன்ட் மட்டும் அணிந்து முகத்தில் காயத்துடன் ஒருவர் நிற்பதை நண்பர்கள் பார்த்துள்ளனர். அவரை பிடிக்க முயற்சித்ததை தொடர்ந்து அந்த நபர் தப்பியோடினார்.
பாதிக்கப்பட்ட மாணவி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உள்ளார். வழக்குப்பதிவு செய்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.