பெண் பாலியல் பலாத்காரம்: குற்றவாளிக்கு 10 ஆண்டு சிறை
பெண் பாலியல் பலாத்காரம்: குற்றவாளிக்கு 10 ஆண்டு சிறை
ADDED : நவ 13, 2025 08:20 PM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
பாலக்காடு: பாலக்காடு அருகே, பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்த வழக்கில் குற்றவாளிக்கு, 10 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து நீதிமன்றம் தீர்ப்பளித்தது.
கேரள மாநிலம், பாலக்காடு மாவட்டம், குமரநல்லூர் பகுதியை சேர்ந்தவர் ரஞ்சித், 35. இவர், 2020ல், 17 வயது மைனர் பெண்ணை வலுக்கட்டாயமாக இழுத்துச் சென்று பாலியல் பலாத்காரம் செய்தார்.
இது தொடர்பாக, பெண்ணின் பெற்றோர் போலீசில் புகார் அளித்தனர். வழக்கு பதிவு செய்த போலீசார் ரஞ்சித்தை கைது செய்தனர். குற்றப்பத்திரிக்கை சமர்ப்பித்த இவ்வழக்கு நேற்று பட்டாம்பி போக்சோ நீதிமன்றம் முன் விசாரணைக்கு வந்தது.
நீதிபதி தினேஷ்பிள்ளை குற்றவாளிக்கு, 10 ஆண்டு கடுங்காவல் சிறை தண்டனையும், 25 ஆயிரம் ரூபாய் அபராதமும் விதித்து தீர்ப்பளித்தார். அரசு தரப்பு வக்கீலாக சந்தீப் ஆஜரானார்.

