sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, மார்ச் 29, 2026 ,பங்குனி 15, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

இந்தியா

/

 மேற்கு வங்க கவர்னராக பொறுப்பேற்றார் ரவி

/

 மேற்கு வங்க கவர்னராக பொறுப்பேற்றார் ரவி

 மேற்கு வங்க கவர்னராக பொறுப்பேற்றார் ரவி

 மேற்கு வங்க கவர்னராக பொறுப்பேற்றார் ரவி

8


UPDATED : மார் 13, 2026 07:06 AM

ADDED : மார் 13, 2026 12:22 AM

Google News

8

UPDATED : மார் 13, 2026 07:06 AM ADDED : மார் 13, 2026 12:22 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கொல்கட்டா: தமிழகத்தின் முன்னாள் கவர்னராக இருந்த ஆர்.என்.ரவி, மேற்கு வங்க மாநிலத்தின் 22வது கவர்னராக நேற்று பொறுப்பேற்றார்.

மேற்கு வங்கத்தில் முதல்வர் மம்தா பானர்ஜி தலைமையில், திரிணமுல் காங்கிரஸ் ஆட்சி நடக்கிறது. இங்கு, கவர்னராக இருந்த அனந்த போசுக்கும் முதல்வர் மம்தாவுக்கும் இடையே மோதல் போக்கு நிலவியது. இந்நிலையில் கடந்த 5ம் தேதி கவர்னர் பதவியில் இருந்து அனந்த போஸ், திடீரென ராஜினாமா செய்தார்.

அவரது ராஜினாமாவை, ஜனாதிபதி திரவுபதி முர்மு ஏற்ற நிலையில், அந்த மாநிலத்தின் புதிய கவர்னராக, தமிழக கவர்னராக இருந்த ரவி நியமிக்கப்பட்டார். இதைத்தொடர்ந்து, தமிழகத்தில் இருந்து நேற்று முன்தினம் விடைபெற்ற ரவி, மேற்கு வங்க மாநிலத்தின் 22வது கவர்னராக நேற்று முறைப்படி பொறுப்பேற்றார்.

மேற்கு வங்கத்தின் கொல்கட்டாவில் உள்ள கவர்னர் மாளிகையில் நேற்று நடந்த பதவியேற்பு விழாவில், கொல்கட்டா உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி சுஜோய் பால், ரவிக்கு பதவிப்பிரமாணம் செய்து வைத்தார்.

இந்நிகழ்ச்சியில் முதல்வர் மம்தா பானர்ஜி, சட்டசபை சபாநாயகர் பீமன் பானர்ஜி உட்பட பலர் பங்கேற்றனர்.






      Dinamalar
      Follow us