நாராயண மூர்த்தி கோவிலில் புனர் பிரதிஷ்டை மகோற்சவம்
நாராயண மூர்த்தி கோவிலில் புனர் பிரதிஷ்டை மகோற்சவம்
ADDED : ஏப் 29, 2025 09:08 PM
பாலக்காடு; பாலக்காடு அருகே, நாராயண மூர்த்தி கோவிலில், புனர் பிரதிஷ்டை மகோற்சவம் இன்று துவங்கி, 2ம் தேதி வரை நடக்கிறது.
கேரள மாநிலம், பாலக்காடு மாவட்டம், வடவன்னூர் பிலாப்புள்ளியில் உள்ளது நாராயணமூர்த்தி கோவில். இக்கோவில் புனர் பிரதிஷ்டை மகோற்சவம் இன்று (30ம் தேதி) முதல், மே மாதம் 2ம் தேதி வரை பல்வேறு சிறப்பு நிகழ்ச்சிகளுடன் நடைபெறுகிறது. இன்று மாலை, 5:30 மணிக்கு ஆச்சரியவரணம், 6:15 மணிக்கு கணபதி பூஜை, தீபாராதனை, பிரசாத சுத்தி, வாஸ்து ஹோமம், வாஸ்துபலி, வாஸ்து கலசாபிஷேகம், பகவத்சேவையும், மாலை 7:30 மணிக்கு அத்தாழ பூஜையும் நடக்கிறது.
நாளை, மே 1ம் தேதி காலை, 5:30 மணிக்கு கணபதி ஹோமம், 6:30க்கு உஷபூஜை, 8:30 மணிக்கு சுத்திகலசாபிஷேகம், 11:30க்கு உச்சபூஜை, மாலை, 3:30 மணிக்கு விளக்கு பூஜை, 6:30க்கு தீபாராதனை, 6:40 மணிக்கு மகாபகவத்சேவை, 7:30க்கு அத்தாழ பூஜை நடக்கிறது.
வரும், 2ம் தேதி காலை 5:30 மணிக்கு மகா கணபதி ஹோமம், 8:30க்கு திரவிய கலசாபிஷேகம், பிரம்ம கலசாபிஷேகம், 9:00 மணிக்கு நாராயணீய பாராயணம், 11:00க்கு உச்ச பூஜைக்கு பின், பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்படுகிறது. மாலை, 6:30 மணிக்கு தீபாராதனை, இரவு 7:00 மணி முதல் பல்வேறு கலை நிகழ்ச்சிகள் நடக்கிறது.

