உள்ளடக்கத்திற்கு செல்ல
உதவி பேராசிரியர்களுக்கு மறு தேர்வு: தேதி அறிவிப்பு
உதவி பேராசிரியர்களுக்கு மறு தேர்வு: தேதி அறிவிப்பு
ADDED : ஆக 16, 2026 11:31 PM
அ நிறம் | அளவு
புதுடில்லி:
நம் நாட்டில் உள்ள பல்கலை மற்றும் கல்லுாரிகளில் உதவிப் பேராசிரியர் பணிக்கான தகுதி பெறவும் முனைவர் பட்டப்படிப்புகளில் சேரவும் தேசிய தேர்வு முகமை சார்பில் நெட் தேர்வு நடத்தப்படுகிறது.
நடப்பாண்டில் முதல் கட்டத்தேர்வு கடந்த ஜூன் 22 முதல் 30ம் தேதி வரையில் நடைபெற்றது. 87 பாடங்களுக்கு நடந்த இத்தேர்வில், ஆங்கிலம், வணிகவியல், சமூகவியல் ஆகிய மூன்று பாடங்களுக்கான வினாத்தாள்களில் பல்வேறு பிழைகள் இருப்பதாக புகார்கள் எழுந்தன.
இதையடுத்து, குழு அமைத்து ஆய்வு செய்த தேசிய தேர்வு முகமை, மூன்று பாடங்களுக்கு மறுதேர்வு நடத்த உத்தரவிட்டுள்ளது. இதன்படி, ஆங்கிலம் மற்றும் வணிகவியல் பாடங்களுக்கான மறுதேர்வு வரும் செப்டம்பர் 9ம் தேதியும், சமூகவியல் பாடத்திற்கான தேர்வு வரும் 10ம் தேதியும் நடைபெறும் என அறிவித்துள்ளது.
