ADDED : ஆக 16, 2026 11:31 PM
அ நிறம் | அளவு
புதுச்சேரி: புதுச்சேரியில் நடைபெற்ற 80வது சுதந்திர தின விழா அணிவகுப்பு மரியாதையில், தனியார் பள்ளிகள் பிரிவில் ரெட்டியார்பாளையம், பிரசிடென்சி மேல்நிலைப் பள்ளி தொடர்ந்து மூன்றாவது முறையாக முதலிடம் பிடித்து, கோப்பையை வென்றது.
வெற்றி பெற்ற மாணவர்களை பள்ளியின் தாளாளர் கிறிஸ்டி ராஜ், முதல்வர் ஜெயந்தி ராணி, துணை முதல்வர் ஆரோக்கியதாஸ் ஆகியோர் பாராட்டினர். மாணவர்களின் சாதனைக்கு துணையாக இருந்த ஆசிரியர்கள், பயிற்சியாளர்களை பாராட்டி கவுரப்படுத்தினர்.
மேலும், சுதந்திர தின விழாவில், பிரசிடென்சி பள்ளியை சேர்ந்த 200க்கும் மேற்பட்ட மாணவ, மாணவியர் நாட்டு நல பணி திட்டம், சிறுவர் சாலை பாதுகாப்பு குழு, சாரணர் சாரணியர் இயக்கம் மற்றும் பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்குபெற்று பள்ளிக்கு பெருமை சேர்த்தனர்.
