மோடியிடம் ஒரு வித தெய்வீக சக்தி இருப்பதை உணர்ந்தேன்: காங். தலைவர் பேட்டி
மோடியிடம் ஒரு வித தெய்வீக சக்தி இருப்பதை உணர்ந்தேன்: காங். தலைவர் பேட்டி
UPDATED : பிப் 02, 2024 07:52 PM
ADDED : பிப் 02, 2024 07:41 PM

புதுடில்லி: பிரதமர் மோடியிடம் ஒரு தெய்வீக சக்தி இருப்பதை நான் உணர்ந்தேன் என காங்.,மூத்த தலைவர் ஆச்சார்யா கிருஷ்ணம் என்பவர் பிரதமர் மோடியை சந்தித்த பின் கூறினார்.
காங்., கட்சியை சேர்ந்தவர் ஆச்சார்யா கிருஷ்ணம், இவர் ‛‛கல்கி தாம் பவுண்டேசன் அமைப்பிற்காக பிப்.19ம் தேதி அடிக்கல் நாட்டு விழாவில் பங்கேற்க வருமாறு பிரதமர் மோடியை நேரில் சந்தித்து அழைப்பிதழை வழங்கினார்.
இச்சந்திப்புக்கு பின் ஆச்சார்யா கிருஷ்ணம் அளித்த பேட்டி,
பிரதமர் மோடியை முதன்முறையாக சந்தித்து அழைப்பிதழை வழங்கினேன். அன்போடு ஏற்றுக் கொண்டு விழாவிற்கு வருவதாக தெரிவித்தார். அவரை நான் சந்தித்த போது அவரிடம் ஒரு தெய்வீக சக்தி இருப்பதை உணர்ந்தேன். அந்த உணர்வுகளை என்னால் வார்த்தைகளால் வெளிப்படுத்த முடியவில்லை. இதனை நான் கூறுவதில் எனக்கு எந்த தயக்கமும் இல்லை. காங்., தலைமை முடிவால் அயோத்தி ராமர் கோயில் கும்பாபிஷேக விழாவில் கலந்து கொள்ள முடியாமல் போனதில் தனக்கு மிகுந்த வருத்தம். இவ்வாறு அவர் கூறினார்.
மோடி நன்றி
இதற்கிடையே அடிக்கல் நாட்டு விழா அழைப்பிதழ் வழங்கிய ஆச்சார்யா கிருஷ்ணமிற்கு நன்றி தெரிவித்து தனது ‛எக்ஸ்' வலைதளத்தில் பதவிவேற்றியுள்ளார் பிரதமர் மோடி .

