ரூ.2,500 கோடி மதிப்பு நிலம் ஆக்கிரமிப்பில் இருந்து மீட்பு
ரூ.2,500 கோடி மதிப்பு நிலம் ஆக்கிரமிப்பில் இருந்து மீட்பு
ADDED : அக் 21, 2024 12:14 AM

பெங்களூரு : பெங்களூரில் வனப்பகுதி ஆக்கிரமிப்பை அகற்றும் பணிகள் தீவிரமடைந்துள்ளன. இதுவரை 103 ஏக்கருக்கும் அதிகமான ஆக்கிரமிப்பு அகற்றப்பட்டுள்ளது.
பெங்களூரின் கக்கலிபுரா வனப்பகுதி மண்டலத்தின் பி.எம்.காவலில் 27.2 ஏக்கர், கெஞ்சேனஹள்ளியில் 16.9 ஏக்கர், சூலிகெரேவில் 2.5 ஏக்கர் உட்பட பல்வேறு பகுதிகளில் நுாற்றுக்கணக்கான வனத்துறை நிலத்தை தனியார் ஆக்கிரமித்துள்ளனர்.
இதை தீவிரமாக கருதிய வனத்துறை அமைச்சர் ஈஸ்வர் கன்ட்ரே, ஆக்கிரமிப்பை அகற்றி நிலத்தை மீட்கும்படி அதிகாரிகளுக்கு உத்தரவிட்டிருந்தார். இதன்படி அதிகாரிகள் ஆக்கிரமிப்பை அகற்றும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.
இதுவரை 103 ஏக்கர் நிலத்தை மீட்டுள்ளனர். இதன் மதிப்பு 2,500 கோடி ரூபாய்க்கும் அதிகமாகும்.
ஆக்கிரமிப்பை அகற்றி, அந்த இடத்தில் மரக்கன்றுகள் நடுகின்றனர். கொத்தனுாரில் 700 கோடி ரூபாய் மதிப்புள்ள 22.08 ஏக்கர் வனப்பகுதி நிலம் ஆக்கிரமிக்கப்பட்டுள்ளது.
இதையும் அப்புறப்படுத்த, அதிகாரிகள் தயாராகின்றனர்.