அலங்கார ஊர்திக்கு மறுப்பு : 7 கோடி கன்னடர்களுக்கு அவமானம்
அலங்கார ஊர்திக்கு மறுப்பு : 7 கோடி கன்னடர்களுக்கு அவமானம்
ADDED : ஜன 09, 2024 11:30 PM

பெங்களூரு: டில்லி குடியரசு தின விழா அணி வகுப்பில் கர்நாடக மாநில அலங்கார ஊர்தி இல்லாததது 7 கோடி கன்னடர்களுக்கு அவமானம் என முதல்வர் சித்தராமையா கூறினார்.
டில்லியில் 26-ம் தேதி குடியரசு தின விழா கோலாகலமாக கொண்டாடப்பட உள்ளது. இதையொட்டி பல்வேறு மாநிலங்களின் பெருமையை விளக்கும் அலங்கார ஊர்திகள் அணிவகுப்பில் இடம் பெறும். சமீபத்தில் தமிழகம் சார்பில் அலங்கார ஊர்தி இடம் பெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இதில் காங்கிரஸ் கட்சி ஆட்சி செய்யும் கர்நாடகா மாநில அலங்கார ஊர்தி இடம் பெறவில்லை. இதற்கு கண்டனம் தெரிவித்துள்ள முதல்வர் சித்தராமையா எக்ஸ் வலைதளத்தில் கூறியது, கடந்தாண்டு சட்டசபை தேர்தலை மனதில் வைத்து அலங்கார ஊர்திக்கு அனுமதித்தனர். இந்தாண்டு திட்டமிட்டே அலங்கார ஊர்திக்கு மத்திய அரசு அனுமதி அளிக்கவில்லை.மத்திய அரசின் இந்த செயல் 7 கோடி கன்னடர்களுக்கு ஏற்பட்டுள்ள அவமானம் என்றார்.