ADDED : பிப் 17, 2024 11:38 PM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கொப்பால் : ''நரேந்திர மோடி பிரதமராக வேண்டும் என்பதற்காக அக்கட்சியுடன் கூட்டணி வைத்துக் கொள்வேன். ஆனால், பா.ஜ., அல்லது காங்கிரசில் சேரும் பேச்சுக்கே இடமில்லை,'' என, கல்யாண ராஜ்ய பிரகதி கட்சி தலைவரும், எம்.எல்.ஏ.,வுமான ஜனார்த்தன ரெட்டி தெரிவித்தார்.
இதுதொடர்பாக, கொப்பாலில் நேற்று அவர் அளித்த பேட்டி:
நரேந்திர மோடி மீண்டும் பிரதமராக வேண்டும். இதன் காரணத்தாலேயே, பா.ஜ.,வுடன் கூட்டணி வைக்க தயாராக உள்ளேன். வேறு எந்த காரணத்தை கொண்டும் பா.ஜ.,வில் சேர மாட்டேன்.
கடந்த 25 ஆண்டுகளாக துணை முதல்வர் சிவகுமாருடன் பழகி வருகிறேன். சட்டசபையில் அவர் அழைத்ததால், அவருடன் அமர்ந்து பேசிக் கொண்டிருந்தேன். அரசியல் ரீதியாக என்னை அழைக்கவில்லை. காங்கிரசிலும் சேரமாட்டேன்.
இவ்வாறு அவர் கூறினார்.