ADDED : டிச 15, 2025 01:17 AM

லக்னோ: மத்திய அரசின், 'உமீத்' இணையதளத்தில் வக்ப் சொத்துகளை டிஜிட்டல் முறையில் பதிவு செய்வதில், நாடு தழுவிய அளவில் உத்தர பிரதேசம் முதலிடத்தில் உள்ளது.
வக்ப் திருத்த சட்டத்தின்படி, 'உமீத்' இணையதளத்தில் நாடு முழுதும் உள்ள வக்ப் சொத்துகளை, அனைத்து மாநில மற்றும் யூனியன் பிரதேச அரசுகள் பதிவு செய்ய வேண்டும். ஒருசில மாநிலங்களில், வக்ப் சொத்துகளை பதிவு செய்ய காலக்கெடு நீட்டிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், காலக்கெடுவுக்கு முன்னரே, உ.பி., யில் உள்ள வக்ப் சொத்துகளை, 'உமீத்' இணைய தளத்தில் அம்மாநில பா.ஜ., அரசு பதிவு செய்துள்ளது. இதன்படி, 92,832 வக்ப் சொத்துகளை உ.பி., அரசு பதிவு செய்துள்ளது. இதில், சன்னி பிரிவில், 86,347; ஷியா பிரிவில், 6,485 சொத்துகள் அடங்கும். மாவட்ட வாரியாக, ஷியா பிரிவில், 625 பதிவுகளுடன் லக்னோ முதலிடத்தில் உள்ளது. சன்னி பிரிவில், 4,940 பதிவுகளுடன் பாராபங்கி முதலிடத்தில் உள்ளது.
நாடு தழுவிய அளவில், 'உமீத்' இணையதளத்தில் அதிக வக்ப் சொத்துகளை பதிவு செய்த மாநிலமாக உ.பி., உருவெடுத்துள்ளது.

