கடும் குளிருக்கு மத்தியில் டில்லியில் குடியரசு தின அணிவகுப்பு ஒத்திகை
கடும் குளிருக்கு மத்தியில் டில்லியில் குடியரசு தின அணிவகுப்பு ஒத்திகை
ADDED : ஜன 12, 2026 09:43 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
புதுடில்லி: குடியரசு தினத்தை முன்னிட்டு, டில்லியில் நிலவி வரும் கடும் குளிருக்கு மத்தியிலும், முப்படை வீரர்கள் அணிவகுப்பு ஒத்திகையில் ஈடுபட்டுள்ளனர்.
நாட்டின் 77வது குடியரசு தினம் வரும் 26ம் தேதி கொண்டாடப்பட உள்ளது. இதையொட்டி, டில்லியில் உள்ள கடமை பாதையில் குடியரசு தின விழா சிறப்பாக கொண்டாடப்படும். அங்கு, ராணுவம், கடற்படை மற்றும் விமானப்படை என முப்படைகளின் அணிவகுப்பு, மாநிலங்களின் அலங்கார ஊர்திகளின் அணிவகுப்பும் நடைபெறுவது வழக்கம்.
டில்லியில் நிலவி வரும் காற்று மாசுபாடு மற்றும் கடும் குளிருக்கு மத்தியில் கடமை பாதையில் பாதுகாப்பு படையினர் அணிவகுப்பு ஒத்திகையில் ஈடுபட்டுள்ளனர். கடந்த டிசம்பர் மாதத்தில் இருந்தே கடுமையான பனிப்பொழிவு நிலவி வரும் நிலையில், அதனை பொருட்படுத்தாமல், வீரர்கள் வீர நடைபோட்டனர்.

