பாசுமதி அரிசி தவிர பிற வகை அரிசி ஏற்றுமதிக்கு விதிக்கப்பட்ட தடை நீக்கம் :
பாசுமதி அரிசி தவிர பிற வகை அரிசி ஏற்றுமதிக்கு விதிக்கப்பட்ட தடை நீக்கம் :
ADDED : செப் 28, 2024 02:55 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
புதுடில்லி: பாசுமதி அல்லாத பிற ரக அரிசி வகைகளை ஏற்றுமதி செய்ய விதிக்கப்பட்ட தடையை நீக்கி மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.
உள்நாட்டில் அரிசி விலை உயர்வை கட்டுப்படுத்து வதற்காகவும், நியாயமான விலையில் போதுமான அரிசி உள்நாட்டில் கிடைப்பதை உறுதி செய்யும் வகையிலும் ,கடந்தாண்டு ஜூலை மாதம் பாசுமதி அல்லாத பிற ரக அரிசி வகைகளை ஏற்றுமதி செய்ய தடை மத்திய அரசு தடை விதித்தது.
இந்நிலையில் பாசுமதி அல்லாத வெள்ளை அரிசி ஏற்றுமதிக்கான தடையை மத்திய அரசு நீக்கி உத்தரவிட்டதாகவும், இது உடனடியாக அமலுக்கு வந்துள்ளதாகவும் அறிவித்தது.
இதன்படி புழுங்கல் அரிசிக்கான ஏற்றுமதி வரியை 20 சதவீதத்தில் இருந்து 10 சதவீதமாக குறைத்துள்ளதாகவும் அந்த அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.