ஆப்ரிக்க பெண்ணின் வயிற்றில் கால்பந்து அளவு கட்டி அகற்றம்
ஆப்ரிக்க பெண்ணின் வயிற்றில் கால்பந்து அளவு கட்டி அகற்றம்
ADDED : நவ 07, 2024 01:41 AM
குர்கான்:ஆப்ரிக்க பெண்ணின் வயிற்றில் இருந்து கால்பந்து அளவு புற்றுநோய் கட்டியை குர்கான் மருத்துவர்கள் அகற்றினர்.
ஆப்ரிக்க நாட்டைச் சேர்ந்த 55 வயதான பெண், கடுமையான வயிற்று வலியால் அவதிப்பட்டார். மருத்துவமனைக்குச் சென்றபோது, அவரது வயிற்றில் பெரிய புற்றுநோய் கட்டி இருப்பது தெரிய வந்தது. அதை அகற்றுவதில் பல்வேறு சிக்கல்கள் இருந்ததால், அறுவைச்சிகிச்சை மேற்கொள்ள அந்நாட்டில் உள்ள பல்வேறு மருத்துவமனைகள் மறுத்துவிட்டன.
இதனால் அவர் இந்தியா வந்தார். அவருக்கு குருகிராமில் உள்ள தனியார் மருத்துவமனையில் பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டன. பின் சிக்கலான அறுவைச்சிகிச்சையை மருத்துவர் குழுவினர் வெற்றிகரமாக மேற்கொண்டனர்.
இறுதியில் அவரது வயிற்றில் இருந்து ஒன்பது கிலோ எடையுள்ள புற்றுநோய் கட்டியை மருத்துவர்கள் வெற்றிகரமாக அகற்றினர்.
அது உள் உறுப்புகளை அழுத்தும் கால்பந்து அளவு இருந்தது. இதை அகற்ற மூன்று மணி நேரம் அறுவைச் சிகிச்சை செய்ததாக மருத்துவமனையின் அறிக்கை தெரிவிக்கிறது.