இந்தோனேசியாவில் பள்ளி கட்டடம் இடிந்தது: மாணவர்கள் 65 பேரை மீட்கும் முயற்சி தீவிரம்
இந்தோனேசியாவில் பள்ளி கட்டடம் இடிந்தது: மாணவர்கள் 65 பேரை மீட்கும் முயற்சி தீவிரம்
ADDED : செப் 30, 2025 10:47 AM

ஜகார்த்தா: இந்தோனேசியாவில் பள்ளி கட்டடம் இடிந்து ஏற்பட்ட
விபத்தில், இடிபாடுகளில் சிக்கிய மாணவர்கள் 65 பேரை மீட்கும் முயற்சி
தீவிரமாக நடந்து வருகிறது. மேலும் 93 பேர் பலத்த காயம் அடைந்து
மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு உள்ளனர்.
இந்தோனேசியாவில்
கிழக்கு ஜாவா நகரமான சிடோர்ஜோவில் பள்ளி ஒன்று செயல்பட்டு வருகிறது. இந்த
பள்ளியில் கட்டடம் இடிந்து விபத்து ஏற்பட்டது. தகவல் அறிந்து சம்பவ
இடத்திற்கு விரைந்த போலீசார் மற்றும் மீட்பு படையினர் நீண்டநேரம் போராடி
மீட்பு பணி மேற்கொண்டு வருகின்றனர். இந்த விபத்தில் ஒரு மாணவன்
உயிரிழந்தான். மேலும் 93 பேர் பலத்த காயங்களுடன் மீட்கப்பட்டு உள்ளனர்.
பலி அதிகரிக்க வாய்ப்பு
அவர்கள்
சிகிச்சைக்காக, மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உள்ளனர். அவர்களில்
சிலர் ஆபத்தான நிலையில் உள்ளனர் என்று அதிகாரிகள் தெரிவித்தனர். மேலும்
இடிபாடுகளில் பல உடல்களைக் கண்டதாகவும், இறப்பு எண்ணிக்கை அதிகரிக்க
வாய்ப்புள்ளது என்றும் மீட்பு படையினர் தெரிவித்தனர்.
பாதிக்கப்பட்டவர்களில் பெரும்பாலோர் ஆண்கள், ஏனெனில் கட்டடத்தின் மற்றொரு
பகுதியில் பெண் மாணவர்கள் தனித்தனியாக பிரார்த்தனை செய்து கொண்டிருந்தனர்.
விசாரணை
கட்டடம்
இடிந்து விழுந்ததற்கான காரணம் குறித்து அதிகாரிகள் விசாரணையைத்
தொடங்கினர். மேலும் மாணவர்கள் 65 பேர் காணாமல் போயுள்ளனர். அவர்கள்
பெரும்பாலும் 7 முதல் 11ம் வகுப்பு வரை படிக்கும் சிறுவர்கள், 12 முதல் 17
வயதுக்குட்பட்டவர்கள்.
இது குறித்து மீட்பு படை அதிகாரி
கூறியதாவது: இடிபாடுகளுக்கு அடியில் சிக்கியவர்களுக்கு ஆக்ஸிஜன் மற்றும்
தண்ணீரை வழங்கி அவர்களை உயிருடன் வைத்திருக்கிறோம்.அதே நேரத்தில் அவர்களை
மீட்க நாங்கள் கடுமையாக உழைக்கிறோம். இடிபாடுகளுக்கு அடியில் சிதறிக்
கிடந்த பல உடல்களை கண்டோம். ஆனால் இன்னும் உயிருடன் இருப்பவர்களைக்
காப்பாற்றுவதில் அதிக கவனம் செலுத்தி வருகிறோம், என்றார்.