ஒவ்வொரு இரண்டு மணி நேரத்திற்கு அறிக்கை கொடு : மத்திய உள்துறை அமைச்சகம் உத்தரவு
ஒவ்வொரு இரண்டு மணி நேரத்திற்கு அறிக்கை கொடு : மத்திய உள்துறை அமைச்சகம் உத்தரவு
UPDATED : ஆக 18, 2024 02:38 AM
ADDED : ஆக 18, 2024 02:26 AM

கோல்கட்டா : மேற்கு வங்கத்தில் பயிற்சி பெண் டாக்டர் மரணத்துக்கு நீதி கேட்டு, நாடு முழுதும் போராட்டம் தீவிரமடைந்துள்ள நிலையில் அனைத்து மாநிலங்களில் சட்டம் ,ஒழுங்கு நிலவரம் குறித்து ஒவ்வொரு 2 மணி நேரத்திற்கு ஒரு முறை அறிக்கை அனுப்ப மத்திய உள்துறை அமைச்சகம் அனைத்து மாநிலங்களுக்கும் உத்தரவிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
மேற்கு வங்கத்தின் கோல்கட்டாவில், ஆர்.ஜி.கார் அரசு மருத்துவக் கல்லுாரி மற்றும் மருத்துவமனை செயல்படுகிறது. இங்கு முதுநிலை இரண்டாம் ஆண்டு படித்த, 31 வயது பயிற்சி பெண் டாக்டர், பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு கொல்லப்பட்டார். இது தொடர்பாக, போலீஸ் நண்பர்கள் குழுவைச் சேர்ந்த சஞ்சய் ராய் கைது செய்யப்பட்டார். இதுகுறித்து சி.பி.ஐ., விசாரித்து வருகிறது.பயிற்சி பெண் டாக்டர் மரணத்துக்கு நீதி கேட்டும், குற்றவாளி மீது விரைந்து நடவடிக்கை எடுக்கக் கோரியும், நாடு முழுதும் பல்வேறு நகரங்களில், பயிற்சி டாக்டர்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர்.
இதன் தொடர்ச்சியாக ஐ.எம்.ஏ., எனப்படும் இந்திய மருத்துவ சங்கம் நாடு தழுவிய போராட்டத்தை அறிவித்தது.
போராட்டம் வலுவடைந்து வரும் நிலையில் நேற்று மத்திய உள்துறை அமைச்சகம் பிறப்பித்துள்ள உத்தரவில் கூறப்பட்டுள்ளது,
போராட்டம் நடைபெற்று வரும் மாநிலங்கள், யூனியன் பிரதேசங்களில் சட்டம் , ஒழுங்கு நிலவரம், பாதுகாப்பு ஏற்பாடுகள், குறித்து ஒவ்வொரு இரண்டு மணி நேரத்திற்கு ஒரு முறை விரிவான அறிக்கைகளை மாநில, யூனியன் பிரதேச உள்துறை செயலகம் ,, மத்திய உள்துறை அமைச்சகத்திற்கு இ.மெயில், பேக்ஸ், மற்றும் வாட்ச் ஆப் ஆகியவற்றின் வாயிலாக அனுப்பி வைக்க வேண்டும்.
அதே நேரம் போராட்டம் நடத்தி வரும் டாக்டர்கள் மருத்துவ பணியாளர்கள், மாணவர்கள் பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில் மாநில அரசு எடுத்து வரும் நடவடிக்கைகளை கண்காணிக்க வேண்டும். இவ்வாறு மத்திய உள்துறை அமைச்சகம் உத்தரவிட்டுள்ளது.
கோல்கட்டாவில் தடை உத்தரவு
கோல்கட்டா
போலீஸ்கமிஷனர் வினீத்குமார் கோயல் பிறப்பித்த உத்தரவில் போராட்டம்
தீவிரம் அடைந்து வருவதால் ஒரு வாரத்திற்கு நகர் முழுவதும் ( பாரதீய பொதுமக்கள் பாதுகாப்பு சட்டம் 163-ன் கீழ் ) தடை உத்தரவு பிறப்பிக்கப்ப்டடு உள்ளது.

