தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/இந்தியா/டில்லியில் நாளை நடத்தவுள்ள பேரணியை ஒத்தை வைக்க சோனியாவுக்கு கோரிக்கை

டில்லியில் நாளை நடத்தவுள்ள பேரணியை ஒத்தை வைக்க சோனியாவுக்கு கோரிக்கை

டில்லியில் நாளை நடத்தவுள்ள பேரணியை ஒத்தை வைக்க சோனியாவுக்கு கோரிக்கை


UPDATED : அக் 31, 2026 12:00 AM

ADDED : அக் 30, 2026 05:36 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : அக் 31, 2026 12:00 AM ADDED : அக் 30, 2026 05:36 PM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

புதுடில்லி: தலைநகர் டில்லியில் எதிர்க்கட்சிகள் நாளை நடத்தவுள்ள பேரணியை ஒத்திவைக்க வேண்டும் என, காங்கிரஸ் கட்சியின் பார்லி., குழு தலைவர் சோனியாவுக்கு, வர்த்தக மற்றும் தொழில் சங்கம் வேண்டுகோள் விடுத்துள்ளது.

சிறப்பு தீவிர வாக்காளர் பட்டியல் திருத்தப் பணியில் முறைகேடு நடந்துள்ளதாக குற்றம் சாட்டி வரும் எதிர்க்கட்சிகள், தலைமை தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார் பதவி விலக வலியுறுத்தி பல்வேறு போராட்டங்களை நடத்தி வருகிறது. இந்நிலையில், டில்லி ராம்லீலா மைதானத்தில் நாளை பிரம்மாண்ட பேரணி நடத்த முடிவு செய்து, அதற்கான ஏற்பாடுகள் மும்முரமாக நடந்து வருகிறது.

‘தீபாவளி பண்டிகை நெருங்கியுள்ள நேரத்தில், எதிர்க்கட்சிகள் நடத்தும் பேரணியால், டில்லியில் வர்த்தகம் கடுமையாக பாதிக்கப்படும். எனவே, பேரணி தேதியை ஒத்திவைக்க வேண்டும்’ என, வர்த்தக மற்றும் தொழில் சங்கம், காங்.,கை சேர்ந்த லோக்சபா எதிர்க்கட்சித் தலைவர் ராகுலுக்கு ஏற்கனவே இரண்டு முறை கடிதம் அனுப்பியுள்ளது. மேலும், இது தொடர்பாக நேரில் சந்தித்து பேச நேரம் கேட்டும் வேண்டுகோள் விடுத்திருந்தது. ஆனால், அவற்றை ராகுல் கண்டுகொள்ளவில்லை.

இந்நிலையில், காங்கிரஸ் கட்சியின் பார்லி., குழு தலைவர் சோனியாவுக்கு, வர்த்தக மற்றும் தொழில் சங்கம் அனுப்பியுள்ள கடிதம்:

ராம்லீலா மைதானத்தில் நாளை நடத்தத் திட்டமிட்டுள்ள பேரணியால், தலைநகர் டில்லியில் அமைந்துள்ள 20க்கும் மேற்பட்ட மார்க்கெட்டுகளில் வர்த்தகம் கடுமையாக பாதிக்கப்படும். ஹிந்துக்களின் முக்கியப் பண்டிகையான தீபாவளி, 8ம் தேதி கொண்டாடப்படுகிறது. அதை முன்னிட்டு ஜவுளி, இனிப்பு வகைகள், உணவு தானியங்கள், பட்டாசு, விளக்குகள் மற்றும் தங்க நகைகள் வியாபாரம் அமோகமாக இருக்கும்ஆனால், எதிர்க்கட்சிகள் நாளை நடத்தும் பேரணியால், மத்திய மற்றும் பழைய டில்லியில், 12,000 கோடி ரூபாய் வரை வர்த்தகம் பாதிக்கப்படும். இதில், சிறு வியாபாரிகள் முதல் தொழிலதிபர்கள் வரை அனைத்து வியாபாரிகளும் கடுமையாக பாதிக்கப்படுவர்.

இந்தப் பேரணியை, தீபாவளி பண்டிகை முடிந்த பின், நவம்பர் 10- அல்லது 11 ஆகிய தேதிகளுக்கு ஒத்தி வைக்க வேண்டும். இல்லையெனில், ராம்லீலா மைதானத்துக்கு பதிலாக புராரி மைதானத்துக்கு மாற்ற வேண்டும். வர்த்தக சங்கத்தின் இந்தக் கோரிக்கையை பரிசீலனை செய்யுமாறு, லோக்சபா எதிர்க்கட்சி தலைவரான ராகுலுக்கும் ஏற்கனவே கடிதம் அனுப்பியுள்ளோம்.

எதிர்க்கட்சிகள் நடத்தும் இந்தப் பேரணிக்கு நாங்கள் எதிர்ப்பு தெரிவிக்கவில்லை. அதை நடத்தும் காலம்தான் எங்களை கவலையில் ஆழ்த்தியுள்ளது. நவம்பர் 6-ம் தேதி தாந்த்ராஸ் பண்டிகை, நவம்பர் 8-ம் தேதி தீபாவளி பண்டிகைகள் கொண்டாடப்படுகின்றன.

தீபாவளி ஏற்பாடுகளுக்கு, நவம்பர் 1-ம் தேதி என்பது மிகவும் முக்கியமான நாள். அந்த நேரத்தில், 10 லட்சம் பேர் ராம் லீலா மைதானத்தில் திரளுவதும், 20,000 வாகனங்கள் மத்திய டில்லிக்குள் நுழைவதும் கடும் போக்குவரத்து நெரிசலை ஏற்படுத்தும்.

ராம்லீலா மைத்தானத்தில், 20,000 வாகனங்களை நிறுத்த இடமில்லை. எனவே, ஜவஹர்லால் நேரு மார்க், பகதூர் ஷா ஜாபர் மார்க் மற்றும் நேதாஜி சுபாஷ் மார்க் உள்ளிட்ட முக்கிய சாலை ஓரங்களிதான் வாகனங்களை நிறுத்துவர். இதனால், மத்திய மற்றும் பழைய டில்லியில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்படும்.

இன்றும் நாளையும் மத்திய டில்லியில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டால், தாந்த்ராஸ் பண்டிகைக்கான பொருட்களை மார்க்கெட்டுகளுக்கு கொண்டு செல்வதில் கடும் சிரமம் ஏற்படும்.

ராம்லீலா மைதானத்தை சுற்றி 5 கி.மீ., தூரத்தில் அமைந்துள்ள சாந்தினி சவுக், சதர் பஜார், கன்னாட் பிளேஸ், காரி பாவோலி, பகீரத் பேலஸ், காஷ்மீரி கேட், சாவ்ரி பஜார், கரோல் பாக் மற்றும் தாரிபா கலான் ஆகிய மார்க்கெட்டுகளில் வியாபாரம் கடுமையாக பாதிக்கப்படும்.

நரேலா, பாவானா, ஓக்லா, மாயாபுரி மற்றும் முண்ட்கா உட்பட 56 தொழிற்பேட்டைகளிலிருந்து, 5,000 லாரிகள் மற்றும் வேன்கள், தினமும் இந்த மார்க்கெட்டுகளுக்கு வருகின்றன. அதேபோல, 3,000 வாகனங்கள் தேசிய தலைநகர் பிராந்தியத்தில் உள்ள 25 முக்கிய சந்தை பகுதிகளுக்கும், நாட்டின் பிற பகுதிகளுக்கும் பொருட்களைக் கொண்டு செல்கின்றன. கடந்த, 10ம் தேதி டில்லியில் நடத்தப்பட்ட போராட்டத்தின் போது, எட்டு மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

எனவே, வர்த்தகர்கள் மற்றும் பொதுமக்களின் நலனை கருத்தில் கொண்டு பேரணியை ஒத்தி வைக்க பரிசீலனை செய்ய வேண்டும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

சமாஜ்வாதி கட்சி தலைவர் அகிலேஷ் யாதவ் மற்றும் திரிணமுல் காங்கிரஸ் தலைவர் மம்தா பானர்ஜி ஆகியோருக்கும் அனுப்பியுள்ள கடிதத்தில், டில்லி பேரணியை ஒத்தி வைக்கக்கோரி வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us