புதுச்சேரி பல்கலை கல்லூரிகளுக்கு இடையே கிரிக்கெட் போட்டி துவக்கம்
புதுச்சேரி பல்கலை கல்லூரிகளுக்கு இடையே கிரிக்கெட் போட்டி துவக்கம்
ADDED : அக் 30, 2026 05:59 PM

புதுச்சேரி: புதுச்சேரி பல்கலைக்கழகத்தின் கீழ் இயங்கும், கல்லுாரிகளுக்கு இடையிலான கிரிக்கெட் போட்டி இன்று (அக்.,30) துவங்கி, ஐந்து நாட்கள் நடக்கிறது.
ராஜிவ் காந்தி கிரிக்கெட் மைதானம், புதுச்சேரி பல்கலைக்கழகத்தின் திருவள்ளுவர் மைதானம், ராஜிவ் காந்தி கால்நடை மருத்துவக் கல்லுாரி மைதானம் என மூன்று இடங்களில் இப்போட்டிகள் நடக்கிறது.
இதில், புதுச்சேரி, காரைக்கால், மாகே, ஏனாம் பகுதிகளை சேர்ந்த 35 கல்லுாரிகள் பங்கேற்கின்றன. போட்டியின் துவக்க விழா, புதுச்சேரி கால்நடை மருத்துவக் கல்லுாரி விளையாட்டு மைதானத்தில் நடந்தது. கால்நடை மருத்துவ கல்லுாரியின் டீன் முருகவேல் போட்டியை துவக்கி வைத்தார்.
புதுச்சேரி பல்கலைக்கழக உடற்கல்வி இயக்குனர் இளையராஜா தலைமை தாங்கினார். காஞ்சி மாமுனிவர் பட்டமேற்படிப்பு மற்றும் ஆராய்ச்சி நிறுவனத்தின் உடற்கல்வி இயக்குநர் உதயசந்திரன் மேற்பார்வையாளராக செயல்பட்டார்.
முதல் நாள் போட்டியில், புதுச்சேரி கால்நடை மருத்துவக் கல்லுாரி அணியும், மணக்குள விநாயகர் மருத்துவக் கல்லுாரி அணியும் மோதின.
