பசும்பொன் தேவர் ஜெயந்தி விழா தி.மு.க., அமைப்பாளர் பங்கேற்பு
பசும்பொன் தேவர் ஜெயந்தி விழா தி.மு.க., அமைப்பாளர் பங்கேற்பு
UPDATED : அக் 30, 2026 05:59 PM
ADDED : அக் 30, 2026 05:55 PM

அ நிறம் | அளவு
புதுச்சேரி: புதுச்சேரி மாநில தேவர் பேரவை சார்பில் பசும்பொன் முத்துராமலிங்க தேவரின் 119வது ஜெயந்தி விழா மற்றும் 64வது குரு பூஜை விழா நடந்தது.
காமராஜர் சாலை பாலாஜி தியேட்டர் அருகே நடந்த விழாவில் தி.மு.க., மாநில அமைப்பாளர் சிவா தேவரின் உருவப் படத்திற்கு மலர்துாவி மரியாதை செலுத்தினார்.
தொடர்ந்து பேரவை சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த அன்னதான நிகழ்ச்சியை துவக்கி வைத்தார். உருளையன்பேட்டை தொகுதி தி.மு.க., பொறுப்பாளர் கோபால், பேரவை நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
