குஜராத்தில் குடியிருப்பு கட்டிடம் இடிந்து விழுந்தது: இடிபாடுகளுக்குள் சிக்கிய 4 பேர்
குஜராத்தில் குடியிருப்பு கட்டிடம் இடிந்து விழுந்தது: இடிபாடுகளுக்குள் சிக்கிய 4 பேர்
ADDED : ஜன 29, 2026 04:54 PM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ஆமதாபாத்: குஜராத்தில் பழைய குடியிருப்பு கட்டிடம் இடிந்து விழுந்தது. இடிபாடுகளுக்குள் 4 பேர் சிக்கியிருக்கலாம் என அஞ்சப்படுகிறது.
குஜராத் மாநிலம் ஆமதாபாத்தின் பழைய நகரப் பகுதியான கீ காந்தா பகுதியில் உள்ள நவதாத் நி போல் என்ற இடத்தில் இன்று(ஜனவரி29) ஒரு பழைய குடியிருப்பு கட்டிடம் இடிந்து விழுந்தது. தகவலறிந்து வந்த தீயணைப்புத் துறையினர், போலீஸ் அதிகாரிகள், ஆமதாபாத் மாநகராட்சி அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து இடிபாடுகளை அகற்றி மீட்பு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
முதற்கட்ட விசாரணையில்,இந்தக் கட்டிடம் மிகவும் பழையது மற்றும் பழுதடைந்த நிலையில் இருந்ததால் இடிந்து விழுந்ததாகத் தெரிகிறது.

