ADDED : டிச 20, 2024 05:26 AM
மங்களூரு: வாரிசுகள் பெயரை பதிவு செய்வதற்காக, ௪ லட்சம் ரூபாய் லஞ்சம் வாங்கிய வருவாய்த்துறை அதிகாரியை, லோக் ஆயுக்தா போலீசார் கைது செய்தனர்.
மங்களூரில் உள்ள முல்கி தாலுகாவில், ஆர்.டி.சி., எனும் பயிர்கள், குத்தகை பத்திரத்தில் தனது வாரிசுகளின் பெயர்களை பதிவு செய்வதற்காக ஒருவர் வந்துள்ளார். வாரிசுகளின் பெயர்களை பதிவு செய்வதற்கு, 4 லட்சம் ரூபாய் லஞ்சமாக வருவாய்த்துறை அதிகாரி கேட்டு உள்ளார்.
இதை கேட்டு அதிர்ந்த அவர், லோக் ஆயுக்தா போலீசாருக்கு, தகவல் அனுப்பி உள்ளார். பின்னர், போலீசார் கொடுத்த திட்டத்தின் பேரில், நேற்று, வருவாய்த்துறை அலுவலகத்திற்கு அந்நபர் சென்றார். அதிகாரியிடம் 4 லட்சம் ரூபாயை கொடுத்து உள்ளார்.
பணத்தை வாங்கிய அதிகாரி, அதை சரிபார்த்து கொண்டிருக்கும் போது, லோக் ஆயுக்தா போலீசார் அவரை கையும், களவுமாக பிடித்தனர். அதிகாரியிடம் விசாரணை நடந்து வருகிறது.