ADDED : டிச 27, 2024 10:26 PM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
பாலக்காடு; பாலக்காடு அருகே, நெல் விவசாயிகளை புறக்கணித்த கேரள அரசை கண்டித்து, விவசாயிகள் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
கேரளா மாநிலம், பாலக்காடு மாவட்டம் குழல்மன்னம் வேளாண்மை உதவி இயக்குனர் அலுவலகம் முன், நேற்று ஒருங்கிணைந்த விவசாயிகள் சங்கம், மத்திய அரசு உயர்த்திய நெல்லின் ஆதார விலையை குறைத்து, கடந்த மூன்று ஆண்டுகளாக நெல் விவசாயிகளை புறக்கணிக்கும் மாநில அரசை கண்டித்து, ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
ஆர்ப்பாட்டத்தை ஓய்வு பெற்ற வேளாண்மை இணை இயக்குனர் முகுந்தன் உன்னி துவக்கி வைத்தார். சங்கத்தின் தலைவர் வேணுகோபால் தலைமை வகித்தார். துணைத் தலைவர் போஸ், மற்றும் நிர்வாகிகள் பேசினர்.

