ஸ்ரீபத்மநாபசுவாமி கோவிலில் திருட்டு: ஹரியானாவில் 3 பேர் கைது!
ஸ்ரீபத்மநாபசுவாமி கோவிலில் திருட்டு: ஹரியானாவில் 3 பேர் கைது!
ADDED : அக் 20, 2024 05:25 PM

திருவனந்தபுரம்: கேரளா ஸ்ரீபத்மநாபசுவாமி கோவிலில் நைவேத்தியம் தயாரிப்பதற்கு பயன்படுத்தப்பட்ட பித்தளை கிண்ணத்தை திருடியதாக, ஹரியானாவில் மூன்று பேரை போலீசார் கைது செய்துள்ளனர்.
இது குறித்து போலீசார் கூறியதாவது:
திருட்டு சம்பவம் கடந்த அக்.13ம் தேதி நடந்துள்ளது. ஸ்ரீபத்மநாபசுவாமி கோயிலில் பலத்த பாதுகாப்பு போடப்பட்டிருந்தது. பேட்டரி போலீஸ் ஒருவரும் இருந்துள்ளார். இவ்வளவு பாதுகாப்புக்கு இடையே இந்த திருட்டு சம்பவம் நடந்திருக்கிறது.
பித்தளை கிண்ணம் திருட்டு குறித்து கோயில் அதிகாரிகள், அக்.15ம் தேதி புகார் அளித்தனர்.
இதனை தொடர்ந்து, நாங்கள் கோவிலில் உள்ள சிசிடிவியில் பதிவாகியுள்ள காட்சிகளை ஆய்வு செய்ததில், திருட்டு நடத்தியவர்கள் அங்குள்ள ஓட்டலில் தங்கி இருந்துள்ளார்கள்.
அதன்பிறகு, கர்நாடக மாநிலம் உடுப்பிக்கு சென்று அங்கிருந்து ஹரியானா மாநிலத்திற்கு தப்பினர்.
ஹரியானாவில் கைதான மூன்று பேரையும் திருவனந்தபுரம் அழைத்து வந்து விசாரணை நடத்துவோம்.
இவ்வாறு போலீசார் கூறினர்.