பஞ்சாபில் குப்பை கிடங்கில் ராக்கெட் வெடி மருந்துகள்
பஞ்சாபில் குப்பை கிடங்கில் ராக்கெட் வெடி மருந்துகள்
ADDED : பிப் 11, 2025 12:57 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
பாட்டியாலா : பஞ்சாபில், முதல்வர் பகவந்த் சிங் மான் தலைமையில் ஆம் ஆத்மி ஆட்சி நடக்கிறது.
இங்கு, பாட்டியாலா மாவட்டத்தின் ராஜ்புரா சாலையில் உள்ள குப்பைக் கிடங்கில், சந்தேகத்துக்குரிய பொருட்கள் இருப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதன்படி, குப்பைக் கிடங்கில் போலீசார் ஆய்வு செய்தனர். அப்போது, அங்கு ஏழு ராக்கெட்டுகளுக்கான வெடி மருந்துகள் கண்டெடுக்கப்பட்டன.
இது குறித்து வழக்குப் பதிந்த போலீசார், அப்பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமராக்களை ஆய்வு செய்து விசாரித்து வருகின்றனர். குப்பைக் கிடங்கில் ராக்கெட் வெடி மருந்துகள் கண்டெடுக்கப்பட்டது, அப்பகுதி மக்களிடையே பீதியை ஏற்படுத்தியது.

