sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, பிப்ரவரி 20, 2026 ,மாசி 8, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

இந்தியா

/

 கொலை, கொள்ளை வழக்குகளில் தேடப்பட்ட ரவுடிகள் பிடிபட்டனர்

/

 கொலை, கொள்ளை வழக்குகளில் தேடப்பட்ட ரவுடிகள் பிடிபட்டனர்

 கொலை, கொள்ளை வழக்குகளில் தேடப்பட்ட ரவுடிகள் பிடிபட்டனர்

 கொலை, கொள்ளை வழக்குகளில் தேடப்பட்ட ரவுடிகள் பிடிபட்டனர்


ADDED : ஜன 31, 2026 02:45 AM

Google News

ADDED : ஜன 31, 2026 02:45 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

புதுடில்லி: கொலை மற்றும் கொள்ளை வழக்குகளில் தேடப்பட்ட ரவுடிகள், துப் பாக்கிச் சண்டைக்குப் பின் கைது செய்யப்பட்டனர்.

டில்லி வெல்கம் காலனியில் துப்பாக்கியால் சுட்டு ஒருவர் கொலை செய்யப்பட்டது தொடர்பாக, முஹமது மொயின் குரேஷி,24, என்ற ரவுடியை போலீசார் தேடி வந்தனர். இந்நிலையில், சிறப்புப் பிரிவு போலீசார் திமர்பூரில் நடத்திய அதிரடி சோதனையில், கடும் துப்பாக்கிச் சண்டைக்குப் பின், குரேஷி கைது செய்யப்பட்டார். காலில் குண்டு பாய்ந்த குரேஷிக்கு, அரசு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்படுகிறது.

கொள்ளையன் உத்தர பிரதேச மாநிலம் மீரட் மாவட்டம் கித்தோரில் போலீசார் நேற்று முன் தினம் இரவு, வாகன சோதனை நடத்தினர். முண் டாலி கிராமத்தில், 21ம் தேதி நடந்த கொள்ளை தொடர்பாக தேடப்பட்ட மொஹ்சின், சாகிப் என்ற அண்டா ஆகிய இருவரும் பைக்கில் வந்தனர். போலீசார் தடுத்தும் நிறுத்தாமல் சென்ற இருவரையும் போலீசார் விரட்டினர். இருவரும் போலீசார் மீது துப்பாக்கியால் சுட்டனர்.

போலீஸ் கொடுத்த பதிலடியில் காலில் குண்டு பாய்ந்து இருவரும் சரிந்தனர். சுற்றிவளைத்த போலீசார் இருவரையும் கைது செய்தனர். மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்படுகிறது. இருவரிடம் இருந்தும், 30,000 ரூபாய் பணம், ஒரு பைக், ஒரு நாட்டுத் துப்பாக்கி மற்றும் தோட்டாக்கள் பறிமுதல் செய்யப்பட்டன.






      Dinamalar
      Follow us