ADDED : ஜன 31, 2026 02:45 AM
ஆசிரியர்கள் குற்றச்சாட்டு
கவர்னருக்கு பரிந்துரை
பள்ளி ஆசிரியர்களுக்கு பதவி உயர்வு வழங்குவதில் பாலினப் பாகுபாடு காட்டப்படுவதாக, சட்டசபை சபாநாயகர் விஜேந்தர் குப்தாவிடம் ஆசிரியர்கள் சங்க நிர்வாகிகள் மனு அளித்தனர். அந்த மனுவை பரிசீலனை செய்த விஜேந்தர் குப்தா, துணைநிலை கவர்னர் சக்சேனாவுக்கு பரிந்துரை செய்தார். கல்வித் துறையில் ஆசிரியர்களுக்கான பதவி உயர்வு பாலின அடிப்படையிலேயே வழங்கப்படுகின்றன என்றும், இதனால், ஆசிரியைகள் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், பதவி உயர்வுக்காக பல ஆண்டுகள் காத்திருப்பதாகவும் குற்றம் சாட்டியுள்ளனர். அதேநேரத்தில், ஆசிரியர்கள் விரைவாக பதவி உயர்வு பெற்று விடுகின்றனர் என்றும் அந்த மனுவில் கூறப்பட்டுள்ளது.
எம்.எல்.ஏ.,க்களுக்கு
மருத்துவ பரிசோதனை
சபாநாயகர் விஜேந்தர் குப்தா கூறியதாவது: டில்லியில் அனைத்து எம்.எல்.ஏ.,க்களுக்கும் இலவச முழு உடல் மருத்துவப் பரிசோதனை திட்டம் விரைவில் துவக்கப்படும். பெரும்பாலான எம்.எல்.ஏ.,க்கள், 40 வயதுக்கு மேற்பட்டோர் என்பதாலும், அவர்களின் பரபரப்பான வாழ்க்கை முறையாலும் தொடர்ச்சியான மருத்துவப் பரிசோதனை அவசியம். இந்த திட்டத்துக்கான பரிந்துரை இறுதிக்கட்டத்தில் உள்ளது. தேவையான அனைத்து ஒப்புதல்களும் பெற்ற பின் அறிவிக்கப்படும். இவ்வாறு அவர் கூறினார். டில்லி சட்டசபையில் பா.ஜ., - 48, ஆம் ஆத்மி - 22 என மொத்தம் 70 எம்.எல்.ஏ.,க்கள் உள்ளனர்.

