ADDED : அக் 15, 2025 11:19 PM
புதுடில்லி: டில்லி பல்கலையின் கீழ் செயல்படும் 12 முழு நிதியுதவி பெற்ற கல்லுாரிகளுக்கு, மூன்றாவது தவணை மானியத் தொகை 108 கோடி ரூபாயை டில்லி அரசு நேற்று விடுவித்தது.
டில்லி கல்வித்துறை அமைச்சர் ஆஷிஷ் சூட், நேற்று கூறியதாவது:
டில்லி பல்கலையின் கீழ் ஆச்சார்யா நரேந்திர தேவ் கல்லுாரி, அதிதி மகாவித்யாலயா, பீம்ராவ் அம்பேத்கர் கல்லுாரி, பாஸ்கராச்சார்யா அறிவியல் கல்லுாரி, பாகினிப் நிவேதிதா கல்லுாரி, தீன் தயாள் உபாத்யாயா கல்லுாரி, இந்திரா காந்தி உடற்கல்வி நிறுவனம், கேசவ் மகாவித்யாலயா, மகாராஜா அக்ரசேன கல் லுா ரி, மகரிஷி வால்மீகி கல்வியியல் கல்லூரி, ஷாஹீத் ராஜ்குரு அறிவியல் கல்லுாரி மற்றும் ஷாஹீத் சுக்தேவ் வணிகக் கல் லுா ரி ஆகியவை அரசின் முழு நிதியுதவியுடன் நடத்தப்படுகிறது .
இந்த 12 கல் லுா ரிகளிலும் 2025 - 20-26ம் ஆண்டுக்கான ஆசிரியர்களின் சம்பளம், கட்டட பராமரிப்பு மற்றும் அத்தியாவசிய செலவுகளுக்காக, 108 கோடி ரூபாய் விடுக்கப்பட்டுள்ளது. மேலும், உடனடி செலவுகளுக்காக கூடுதலாக 24 கோடி ரூபாயும் வழங்கப்பட்டுள்ளது.
இதன் வாயிலாக, 12 கல்லுாரிகளுக்கும் இதுவரை மூன்று தவணைகளில் மொத்தம் 325 கோடி ரூபாய் வழங்கப்பட்டுள்ளது. இது, ஆசிரியர்கள் மற்றும் மாணவர்களுக்கு முதல்வர் வழங்கிய தீபாவளி பரிசு.
முந்தைய ஆம் ஆத்மி அரசு, கல்லுாரிகளுக்கு உரிய நேரத்தில் மானியத் தொகையை வழங்கவில்லை.
இவ்வாறு அவர் கூறினார்.