ADDED : ஏப் 30, 2025 07:00 AM

மும்பை : பிரபல ஹிந்தி நடிகையும், மாடலுமான நேஹா மாலிக், மும்பையில் உள்ள அந்தேரி மேற்கு பகுதியில், தன் தாய் மஞ்சு மாலிக்குடன் வசித்து வருகிறார். அவரது வீட்டில் நீண்ட காலமாக ஷெநெஸ் முஸ்தபா ஷேக் என்ற பெண் வேலை பார்த்து வந்தார்.
நேஹா மாலிக், தன்னுடைய நகைகளை மர பீரோவில் வைத்திருந்தார்.
அவ்வப்போது வெளியிடங்களுக்கு செல்லும் போது, அந்த நகைகளை அணிந்து விட்டு, மர பீரோவை பூட்டாமல் வைப்பது வழக்கம்.
கடந்த 25ம் தேதி அவர் அணிந்து, கழற்றி வைத்திருந்த, 34.49 லட்சம் ரூபாய் மதிப்புள்ள தங்க நகைகளை காணவில்லை. ஷெநெஸ் முஸ்தபா ஷேக் என்ற அந்த பெண், மறுநாள் முதல் பணிக்கு வரவில்லை.
இதையடுத்து, அவர் தான் அந்த நகையை திருடியிருக்க வேண்டும் என கூறி, அந்த பெண் மீது நேஹா மாலிக், போலீஸ் ஸ்டேஷனில் புகார் கொடுத்துஉள்ளார்.
தலைமறைவான ஷெநெஸ் முஸ்தபா ஷேக்கை போலீசார் தேடி வருகின்றனர்.

