sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

இந்தியா

/

விவசாயிகளுக்கு ரூ.41 ஆயிரம் கோடி உதவி; பார்லி கூட்டுக்கூட்டத்தில் ஜனாதிபதி முர்மு உரை!

/

விவசாயிகளுக்கு ரூ.41 ஆயிரம் கோடி உதவி; பார்லி கூட்டுக்கூட்டத்தில் ஜனாதிபதி முர்மு உரை!

விவசாயிகளுக்கு ரூ.41 ஆயிரம் கோடி உதவி; பார்லி கூட்டுக்கூட்டத்தில் ஜனாதிபதி முர்மு உரை!

விவசாயிகளுக்கு ரூ.41 ஆயிரம் கோடி உதவி; பார்லி கூட்டுக்கூட்டத்தில் ஜனாதிபதி முர்மு உரை!

5


UPDATED : ஜன 31, 2025 12:17 PM

ADDED : ஜன 31, 2025 11:28 AM

Google News

UPDATED : ஜன 31, 2025 12:17 PM ADDED : ஜன 31, 2025 11:28 AM

5


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

புதுடில்லி: பார்லிமென்ட் பட்ஜெட் கூட்டத்தொடர் இன்று (ஜன.,31) துவங்கியது. விவசாயிகளுக்கு உதவித் தொகையாக ரூ.41,000 கோடி மத்திய அரசு வழங்கி உள்ளது என பார்லி கூட்டத்தொடரில் ஜனாதிபதி திரவுபதி முர்மு உரையாற்றினார்.

பார்லிமென்ட் பட்ஜெட் கூட்டத்தொடர் இன்று துவங்கியது. முதல் நாளான இன்று, கூட்டுக் கூட்டத்தில் ஜனாதிபதி திரவுபதி முர்மு உரையாற்றுகிறார். வரும் நிதியாண்டுக்கான மத்திய பட்ஜெட்டை, நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் நாளை தாக்கல் செய்ய உள்ளார்.

இந்த பட்ஜெட் கூட்டத்தொடர் இரண்டு கட்டங்களாக நடக்க உள்ளது. முதற்கட்டம், பிப்., 13ல் முடிகிறது. மார்ச் 10ல் துவங்கும் இரண்டாம் கட்ட கூட்டத்தொடர், ஏப்., 4 வரை நடக்க உள்ளது. பார்லிமென்ட் பட்ஜெட் கூட்டத்தொடர் ஜனாதிபதி திரவுபதி முர்மு உரையுடன் துவங்கியது. பார்லி., கூட்டத்தொடரில் ஜனாதிபதி திரவுபதி முர்மு பேசியதாவது: முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் மறைவிற்கு இரங்கல் தெரிவித்துக் கொள்கிறேன். அரசியல் சாசனத்தை உருவாக்கிய அனைவருக்கும் மரியாதை செலுத்துகிறேன்.

ரூ.41,000 கோடி

கும்பமேளாவில் கூட்ட நெரிசலில் சிக்கி இருந்தவரின் குடும்பத்திற்கு இரங்கல் தெரிவித்துக் கொள்கிறேன். காயம் அடைந்தவர்கள் விரைவில் குணமடைய இறைவனை வேண்டுகிறேன். மக்களுக்கு வீட்டு வசதி வழங்கும் திட்டத்தை மத்திய அரசு சிறப்பாக செயல்படுத்துகிறது. விவசாயிகளுக்கு உதவித்தொகையாக ரூ.41,000 கோடி மத்திய அரசு வழங்கி உள்ளது. 2.25 கோடி சொத்து உரிமை அடையாள அட்டைகள் வழங்கப்பட்டுள்ளன. புதிய முடிவுகள் வேகமாக அரசால் நிறைவேற்றப்படுகின்றன.

வளர்ந்த பாரதம்

ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டம் அமல்படுத்தப்பட்டு உள்ளது. ஏழைகளின் கனவுகளை நனவாக்க மத்திய அரசு பாடுபட்டு வருகிறது. 80 சதவீத தள்ளுபடி விலையில் மருந்துகள் வழங்கப்படுகின்றன. மேக் இன் இந்தியா, ஸ்டார்ட் அப் இந்தியா மூலம் இளைஞர்கள் வேலைவாய்ப்பு பெற்றுள்ளனர். நாட்டில் பெண்கள் முன்னேற்றம் அடைந்துள்ளனர். 2047ல் வளர்ந்த பாரதம் என்ற நமது இலக்கு உலக நாடுகளின் கவனத்தை ஈர்த்துள்ளது.

மத்திய அரசின் நடவடிக்கைகளால் 25 கோடி ஏழைகள் வறுமையின் பிடியில் இருந்து மீண்டுள்ளனர்.

முத்ரா கடன்

சிறு தொழில்களை ஊக்குவிக்கும் வகையில் முத்ரா கடன் தொகை ரூ.20 லட்சம் வரை நீட்டிக்கப்பட்டு உள்ளது. கோவிட் தொற்றுக்கு பிறகும் இந்தியாவின் பொருளாதாரம் வளர்ச்சி பாதையிலேயே உள்ளது. தகவல் தொழில்நுட்பத் துறையில் இந்தியா முன்னணியில் உள்ளது. நாட்டின் மூலை முடுக்கெங்கிலும் டிஜிட்டல் பண பரிவர்த்தனைகள் செயல்பாட்டில் உள்ளன. செயற்கை நுண்ணறிவு துறையின் வளர்ச்சிக்காக சிறப்பு திட்டம் துவங்கப்பட்டுள்ளது. சிறு,குறு தொழில்களுக்கு பல்வேறு திட்டங்கள் மூலம் ஊக்கம் அளிக்கப்படுகிறது.

டிஜிட்டல் பரிவர்த்தனை

சிறு மற்றும் குறு தொழில்களில் ஈடுபட்டு உள்ளவருக்கு சுலபமாக கடன் வழங்கப்படுகிறது. டிஜிட்டல் பண பரிவர்த்தனைகள் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. சிறு வியாபாரிகளும் டிஜிட்டல் பரிவர்த்தனையில் பலன் அடைந்துள்ளது சமூக நீதி அம்சம். சைபர் கூட்டங்களை தடுக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகின்றது. உலகத்தரம் வாய்ந்த உள்கட்டமைப்பு வசதிகளை உருவாக்க அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது. முன்னெப்போதும் இல்லாத அளவு உள்கட்டமைப்பு வசதிகளில் முதலீடு செய்யப்பட்டுள்ளது. இவ்வாறு அவர் பேசினார்.

பட்ஜெட் கூட்டத்தொடரை சுமூகமாக நடத்துவது தொடர்பாக, அனைத்துக் கட்சி கூட்டம், டில்லியில் நேற்று நடந்தது. இது போல், பல்வேறு பிரச்னைகள் தொடர்பாக விவாதிக்க வேண்டும் என, எதிர்க்கட்சிகள் பட்டியலிட்டன. இந்த கூட்டத்தொடரில், வக்பு வாரிய திருத்த மசோதா உட்பட 16 மசோதாக்களை தாக்கல் செய்ய மத்திய அரசு திட்டமிட்டுள்ளது.






      Dinamalar
      Follow us