UPDATED : நவ 23, 2026 08:46 PM
ADDED : நவ 23, 2026 08:46 PM
சபரிமலை:
பம்பை நதியில் பக்தர்கள் தங்கள் ஆடைகளை வீசினால், 5 ஆயிரம் ரூபாய் அபராதம் விதிக்க கேரள அரசு முடிவு செய்துள்ளது.
சபரிமலை அய்யப்பனை தரிசிக்க வரும் பக்தர்கள் பம்பை நதியில் குளிப்பது வழக்கம். அவ்வாறு குளிக்கும் போது தங்கள் ஆடைகளை அங்கேயே அவிழ்த்து போட்டு விட்டு செல்கின்றனர்.
இதனால், ஆற்றில் இருந்து நுாற்றுக்கணக்கான டன் துணிகள் அகற்றப்படுகிறது. இது தொடர்பாக அரசு விழிப்புணர்வு ஏற்படுத்தியும் பலன் இல்லை. எனவே, இந்த மண்டல – மகர விளக்கு பூஜை காலத்தில், பம்பை ஆறு மாசடைவதை முடிவுக்கு கொண்டு வரும் வகையில் கேரள அரசு அரசாணை பிறப்பித்துள்ளது.
அதன்படி பம்பையில் துணியை கழிற்றி வீசும் பக்தர்களுக்கு 5 ஆயிரம் ரூபாய் அபராதம் விதிக்க போலீசுக்கு அதிகாரம் வழங்கப்பட்டுள்ளது. எனவே பக்தர்கள் இனி பம்பையில் துணிகளை வீச வேண்டாம் என்று கேரளா அரசு வேண்டுகோள் விடுத்துள்ளது.
