ADDED : ஜன 07, 2025 09:19 PM
புதுடில்லி:சவுதி அரேபியாவில் இருந்து சட்டை பொத்தான்களாக மாற்றி கடத்தி வரப்பட்ட 29 லட்சம் ரூபாய் மதிப்புள்ள தங்கம் சர்வதேச விமான நிலையத்தில் பறிமுதல் செய்யப்பட்டது.
சவுதி அரேபியாவின் ஜெட்டா நகரில் இருந்து, புதுடில்லிக்கு வந்த பயணியரிடம் ஸ்கிரீனிங் சோதனை நடத்தப்பட்டது. மேலும், 'ஸ்பாட் ப்ரொபைலிங்' யுக்தியை பயன்படுத்தி சுங்கத் துறை அதிகாரிகள், பயணியரிடம் சோதனை நடத்தினர்.
ஒரு பயணி மீது சந்தேகம் ஏற்பட்டது. அவரை முழுமையாக ஆய்வு செய்தனர். தங்கத்தில் செய்யப்பட்ட 201 வெள்ளி முலாம் பூசப்பட்ட மோதிரங்கள், சட்டையின் பொத்தான்கள் கண்டுபிடிக்கப்பட்டு பறிமுதல் செய்யப்பட்டது. பறிமுதல் செய்யப்பட்ட 379 கிராம் தங்கத்தின் மதிப்பு 29 லட்சம் ரூபாய் என, அதிகாரிகள் கூறினர்.
அதேபோல, ஜெட்டாவிலிருந்து வந்த மற்றொரு பயணியிடம் 8 இரும்பு உருளைக்குள் மறைத்து வைத்திருந்த தங்கத் துண்டுகள் கண்டுபிடிக்கப்பட்டு பறிமுதல் செய்யப்பட்டது மொத்தம் 600 கிராம் எடையுள்ள அந்த தங்கம் ரூ.46.80 லட்சம் என சுங்கத்துறையினர் தெரிவித்தனர்.